Breaking News

ஜாதி கொடுமை சக மாணவனை பிளேடால் கிழித்த பகீர் சம்பவம் !

அட்மின் மீடியா
0

ஜாதி கொடுமை சக மாணவனை பிளேடால் கிழித்த பகீர் சம்பவம் !




மதுரை மாவட்டம் , அலங்காநல்லூர் ஒன்றியம், பாலமேடு அருகே மறவப்பட்டி காலனி சேர்ந்த தலித் மாணவன் சரவணகுமார்,



பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். 11.10.2019 அன்று மாலை மகேஸ்வரன் என்ற மாணவர் மோகன்ராஜ் என்பவரின் பையை எடுத்து ஒளித்து வைத்துக்கொண்டு வேண்டும் என்றே  தேட வைத்துள்ளார்.



இதை சரவணகுமார் மற்றும் மோகன்ராஜ் மேற்படி மகேஸ்வரனிடம் கேட்டுள்ளனர், இதனால் ஆத்திரமடைந்த மகேஸ்வரன், சரவணகுமாரை பார்த்து ஏண்டா நீயெல்லாம் என்னை எதிர்த்து பேசுவியா என்று கூறியதும் மட்டுமல்லாமல் சாதிப்பெயரை சொல்லி தகாத வார்த்தைகளிலும் பேசி தான் வைத்திருந்தா பிளேடால் சரவணகுமாரின் முதுகில் கிழித்துள்ளான்.

வலி தாங்காமல் கத்திய சரவணக்குமாரின் கதறலை கேட்டு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவனை அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர்


இது குறித்து சரவணக்குமாரின் தந்தை ராமு, பாலமேடு காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்துள்ளார். 

சாதிகள் இல்லையடி பாப்பா! – குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!  என்று பாடம் படிக்கும் பள்ளியிலே ஜாதி கொடுமை அறங்கேறியிறுப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிள்ளது

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback