Breaking News

இறைவன் கொடுத்த வரம்... தூக்கம்.

அட்மின் மீடியா
2

உயிரினங்கள் ஒவ்வொன்றுக்கும் இறைவன் வழங்கிய அருட் கொடைகளில் ஒன்று தூக்கம் ஆகும். உயிர் வாழ்வதற்கு தேவையான காற்று, தண்ணீர், உணவு என்ற வரிசையில் தூக்கம் என்பதையும் சேர்த்துச் சொன்னால் அது மிகையாகாது என்று கூறும் அளவுக்கு மனித வாழ்வில் ""தூக்கம் என்பது மிக அத்தியாவசிய மான ஒன்றாக விளங்குகிறது.


உயிரினங்களாய் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் ஓய்வு தேவைப்படுகின்றது. அந்த ஓய்வை தூக்கத்தின் மூலம் தான் பெற முடியும் . 
ஆரோக்கியத்தின் அடையாளம் நல்ல தூக்கம் என்பது நிருபிக்கப்பட்ட மருத்துவ உண்மை. 
நமது நரம்பு மண்டலம் சரியாக வேலை செய்வதற்கு ஆழ்ந்த தூக்கம் உதவுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தூக்கம் ஒரு  சுகமான மருத்துவம். பலவித உடல் நோய்கள் மற்றும் மனச்சோர்வுகள்  சில மணி நேர தூக்கத்தினால் காணாமல் போகிறது

தூங்கும் சமயத்தில், நம்முடைய உடலில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. உடலின் பாகங்கள் தளர்வடைந்து ஓய்வு பெற்று, பகல் நேரத்தில் ஏற்பட்ட தேய்மானங்களுக்கு ஈடுகட்டுகின்றன.மீண்டும் நம்மை அடுத்த நாளுக்கு நம்மை தயார் செய்கின்றது. சாதார ணமாக ஒரு மனிதனுக்கு எட்டு மணி நேர தூக்கம் உடல் ஆரோக்கியத் திற்கு போதுமானது .


மனித வாழ்க்கையில் தூக்கத்திற்கு மிகப் பெரிய பங்கிருக்கிறது. அதுதான் பகல் முழுவதும் உடல் ரீதியாகவும், சிந்தனை ரீதியாகவும், உள ரீதியாக வும் மனிதன் அடைகின்ற களைப்புகளை ஈடுசெய்கின்றது. ஆழ்ந்த தூக்கத்தின் போதுதான் செல் வளர்ச்சிக்குத் தேவைப்படும் புரதத்தை நமது உடல் தயார் செய்கிறது. உணர்ச்சிகளையும் மற்றவர்களோடு உறவாடும் நடவடிக்கைகளையும் மூளையில் கட்டுப்படுத்தும் பகுதிக்கு நல்ல ஓய்வு கிடைப்பதால் விழிக்கும் போது புத்துணர்ச்சி கிடைக்கிறது. 


அப்படிபட்ட தூக்கததை இழந்தால் ஆரோக்கியமான உறக்கத்தைப் பேணிக் கொள்வதற்கு உடல் ரீதியான ஓய்வு,  சிந்தனை ரீதியான ஓய்வு,  உள ரீதியான ஓய்வு என  மூன்று வகைகளில் உண்டு . இவற்றில் ஏதேனும் ஒன்றில் கோளாறு ஏற்பட்டாலும் உறக்கமின்மைக்கு அதுவே காரணமாகிவிடும்.

சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு மிகப் பெரிய உடல் பாதிப்பு ஏற்படுகிறது.
முடிவெடுக்கும் ஆற்றல், திட்டமிடும் ஆற்றல், நினைவாற்றல், கவனம் ஆகியவைத் தூக்கம் இல்லாத்தால் பாதிக்கப்படுகிறது.

நெஞ்சுவலி, கால்மூட்டுவலி, மனச் சோர்வு, தினசரிக் கடமைகளைச் செய்ய இயலாமை போன்ற உடல்நலக் குறைவுகளுக்கு இவர்கள் ஆளாகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

ஏதாவது ஒரு விசயத்தைப் பற்றி சிந்தித்தல், குடும்பப் பிரச்சினைகள் போன்றன தூக்கத்தை பாதிக்கக் கூடியனவாகும். இதனால் சிலருக்குப் படுத்தால் தூக்கம் வராது. எவ்வளவுதான் புரண்டுப் படுத்தாலும், சில மணி நேரங்கள் ஆனாலும் தூக்கம் வராது. தூக்கம் வராத வேளையில் எரிச்சலும், களைப்பும் ஏமாற்றமும் ஏற்படுகிறது. பலருக்கு மனக்கவலை நிமித்தம் தூக்கம் வருவதில்லை. தூக்கம் இல்லை என்றநிலையை விட பெரிய பிரச்சனை வேறொன்றும்  இல்லை .


தூக்கம் சரியாக இல்லை என்றால், வாழ்வு துக்கமாக மாறிவிடும் நோய் வராமல் இருப்பதற்கு தூக்கம் அவசியம். வந்த நோய் தீர்வதற்கும் தூக்கம் அவசியம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும். தூக்கம் இல்லை என்றால் மன உளைச்சலில் தொடர்ந்து, தீராத வியாதிகள் வருவதற்கு அதுவே காரணமாக அமைந்து விடுகிறது.


போதுமான அளவு தூக்கம் கிடைக்காததால் அன்றைய நாளைத் தூக்கக்கலக்கத்துடன் கழிப்பது மட்டுமல்லமால் போதுமான தூக்கமில்லாததால் உடலுக்குத் தேவையான சுரப்பிகளும் ஒழுங்காகச் சுரப்பதில்லை. நமது மனநலமும் பாதிக்கப்படுகிறது.


தூக்கம் வராதபோது கண்களைப் கையால் பாதி அடைத்து, சில நிமிடங்கள் வைத்துப்பாருங்கள் தூக்கம் தானாக வரும். கீழ் இமைகளின் அடிப் பகுதியை விரல்களால் தொட்டு மென்மை யாக மேல்நோக்கி உயர்த்தி ஒரு சில வினாடிகள் பிடித்தால் கூட தூக்கம் வந்துவிடும்.

ஓய்வு நமக்கு முக்கியம் தேவை . உடம்பில் உள்ள எல்லா நரம்புகளும் ஓய்வு எடுப்பதற்க்கு உறக்கம் இன்றியமையாதது .

இரவு 9 மணிக்கு தூங்கி அதிகாலை 5 மணிக்கு எழுவது சிறந்தது

Tags: கட்டுரை

Share this

2 Comments

USWATHUL HASANA MEDIA

12 October 2019 at 17:44

அருமையான தெளிவான கட்டுரை...

அட்மின் மீடியா

12 October 2019 at 20:23

உங்களை விடவா சகோதரே