Breaking News

வங்கி வேலைநிறுத்தம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் 22-ந்தேதி நடைபெறும் வங்கி ஊழியர் வேலைநிறுத்தத்துக்கு 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு
    

நாடு முழுவதும் 22-ந்தேதி நடைபெறும் வங்கி ஊழியர் வேலைநிறுத்தத்துக்கு 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.


 மத்திய அரசு 10 பொதுத்துறை வங்கிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து 4 வங்கிகளாக சமீபத்தில் குறைத்தது.


இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 22-ந்தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் 

ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.
அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கம் மற்றும் வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.


இந்த போராட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் நேற்று ஆதரவு தெரிவித்துள்ளன

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback