Breaking News

மேற்கு வங்கத்தில் கர்ப்பிணி பெண் குடும்பத்துடன் கொடூரமாக கொலை என்ன நடந்தது

அட்மின் மீடியா
0
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஜியாகாஞ் என்ற பகுதியைச் சேர்ந்தவர் போந்து கோபால் பால். இவர் ஒரு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி பெயர் பியூட்டி. இவர்களுக்கு அங்கன் என்ற 8 வயது மகன் இருக்கிறான்.
 
இந்நிலையில், இவர்கள் 3 பேருமே அவர்களது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். யார் இவர்களை கொலை செய்தார்கள் என்று தெரியவில்லை. இதனால் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து முர்ஷிதாபாத் மாவட்ட காவல்துறை எஸ்பி அவர்கள் சொல்லும்போது, "ஆசிரியர் போந்து கோபால் வீட்டு பக்கத்தில் விஜயதசமி பூஜைகள் நடந்துள்ளன. ஆனால், இவர் குடும்பத்தில் இருந்து மட்டும் அந்த பூஜைக்கு செல்லவில்லை. அதனால்தான் அங்கிருப்பவர்களுக்கு சந்தேகம் வீட்டுக்கே வந்து என்ன, என்று பார்த்துள்ளனர். வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

தட்டி தட்டி பார்த்தும் திறக்கவில்லை என்பதால், அந்த பகுதி மக்கள் உடனே போலீசுக்கு தகவல் சொல்லி உள்ளனர். போலீசாரும் வீட்டின் கதவை உடைத்து கொண்டு பார்த்தபோது, கோபால், மனைவி பியூட்டி, மகன் என 3 பேருமே கொலை செய்யப்பட்டு கிடந்தனர். மனைவி பியூட்டி கர்பமாக இருந்துள்ளார்


மூவரின் உடலிலும் வெட்டுக் காயங்கள், இரத்தம் வெள்ளமாய் காட்சி அளித்து இருந்ததாகவும், ஆனால் குழந்தையின் கழுத்தை துணியை சுற்றி நெரித்து கொன்றுள்ளார்கள்.

இந்த கொலை சம்பவம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி ஆதரவாளர்களால் அரசியல் சார்ந்த விவகாரமாக பார்க்கபடுகின்றது . ஏனெனில், கொலை செய்யப்பட்ட பந்த் பிரகாஷ் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொண்டர் எனக் கூறப்படுகிறது. அவர் சமீபத்தில் ஆர்.எஸ் .எஸ் அமைப்பில் இணைந்ததாக கூறுகின்றனர்

கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், கொலை  தொடர்பாக இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை.
ஆனால் அதற்க்குள் பல வதந்தி செய்திகள் பரவுகின்றது.வதந்திகளை நம்பாதீர்கள்.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback