வயதான காலத்தில் பெற்றோரை தவிக்க விட்டால் 6 மாதம் சிறை
அட்மின் மீடியா
0
வயதான காலத்தில் பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு,
6 மாதம் சிறைதண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு சட்டதிருத்தம் கொண்டு வர உள்ளது.
கஷ்டப்பட்டு ஆளாக்கிய பெற்றோர்களை வயதான காலத்தில்
காப்பற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு பிள்ளைக்கும் இருக்கிறது.
ஆனால் ஒரு சிலர் தங்கள் பெற்றோர்களை வயதான காலத்தில்
தவிக்க விட்டு விடுகின்றனர்.
மத்திய அரசு இது குரித்து பெற்றோர் மற்றும் மூத்த
குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம் 2007 ல் திருத்தம் கொண்டுவருவதற்கான சட்டவரைவை தயாரித்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி வயதான பெற்றோர்களை
கவனிக்காமல் தவிக்க விடும் பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை தண்டனை கிடைக்கும்.
இந்த தண்டனை காலத்தை 3 மாதத்திலிருந்து 6 மாத காலமாக
அதிகரிக்க புதிய வரைவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தற்போது மகன்கள், மகள்கள், பேரக்குழந்தைகள் மட்டுமே
சட்டவரம்புக்குள் வரும் நிலையில் புதிய சட்டவரைவின்படி, தத்து குழந்தைகள், மருமகன்கள்,
மருமகள்கள், பேரக்குழந்தைகள் ஆகியோரும் சட்ட வரம்புக்குள் வர வழிவகை செய்யப்பட்டுள்ளது