ஹைதராபாத் நிஜாமின் 300 கோடி யாருக்கு? பாகிஸ்தானுக்கு எதிராக லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு
அட்மின் மீடியா
0
இந்தியா சுதந்திரம் பெற்றதும், பல சமஸ்தானங்கள் இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளிலும் இணைந்தன.
1948ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, ஹைதராபாத்தின் நிஜாம், மிர் ஒஸ்மான் அலிகான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் சேர மறுத்துவிட்டார்
அப்போது அவர் 1 மில்லியன் பவுண்டுகளுக்கு மேலான தொகையை, பாகிஸ்தான் துணை தூதர் ஹபீப் இப்ராஹிம் ரஹிம்தூலாவின் லண்டன் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். பாதுகாப்பாக இந்த தொகையை வைத்திருக்க அவர்கோரிக்கைவிடுத்தார்.
அதன் பின்பு 1948ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி ஹைதராபாத் சமஸ்தானம் இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது.
ஆனால், இந்தப் பணத்திற்கு நிஜாமின் வாரிசுகள் உரிமை கோரியதால் சர்ச்சை எழுந்தது.
இந்த வழக்கு லண்டன் உயர்நீதிமன்றத்திற்கு சென்றது.
கடந்த 70 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது.
அதேபோல், பாகிஸ்தானும் அந்தப் பணத்திற்கு உரிமை கோரியது.
1948 ஆம் ஆண்டில் ஹைதராபாத் இணைக்கப்படுவதற்கு முன்னர் நிஜாமிற்கு வழங்கப்பட்ட ஆயுதங்களுக்கு ஈடுசெய்ய பணம் மாற்றப்பட்டதால், இந்த நிதி எங்களுக்கு சொந்தமானது என்று 2013ல் பாகிஸ்தான் அரசு கூறியது.
இந்தியாவின் வசம் இந்த நிதி போகக்கூடாது என்றுதான், எங்களுக்கு அனுப்பப்பட்டது என்றும், பாகிஸ்தான் வாதிட்டது.
ஆனால் வங்கியில் உள்ள இந்த பணம் ஆயுதங்களுக்குப் பதிலாக வழங்கப்பட்டது என பாகிஸ்தான் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டுள்ளது என்ற பாகிஸ்தானின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில், 70 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்கில், லண்டன் உயர்நீதிமன்றம் பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
நிஜாமின் வாரிசுகளான முக்காராம் ஜா மற்றும் அவரது இளைய சகோதரர் முஃபாகாம் ஜா இருவரும் இந்திய அரசுடன் இணைந்து நடத்திய வழக்கில் அவர்களுக்கு வெற்றி கிட்டியுள்ளது.
நீதிபதி மார்கஸ் ஸ்மித் அளித்த தீர்ப்பில், "நிஜாம் VIIl (அதாவது, மிர் ஒஸ்மான் அலிகான்) வாரிசுகளுக்கு பணத்திற்கான உரிமை உண்டு" என்று தெரிவித்தார்.
1948 ல் நிஜாம் அனுப்பிய தொகை சுமார் 1 மில்லியன் பவுண்ட் என்றாலும், அது தற்போது வளர்ந்து 35 மில்லியன் பவுண்ட்டாக மாறியுள்ளது
இந்திய மதிப்பில் அந்தச் மதிப்பு 306
கோடி ஆகும்.