வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பினால் மத்திய பாஜக அரசின் 12.36 % சேவை வரி ? உண்மையா
அட்மின் மீடியா
0
இறக்கமற்ற கொள்ளைக்கூட்டம். வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும பணத்திற்கு வருகிறது மத்திய பாஜக அரசின் 12.36 % சேவை வரி வெளிநாடுகளில் வேலை செய்யும் நண்பர்கள் கவனத்திற்கு
நாம் நம் தாய் நாடு , குடும்பம் , நண்பர்கள் ,சொந்தங்கள் மற்றும் சொந்த ஊரை விட்டு கடல் கடந்து இங்கு வந்து நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஒரு பிச்சைகார கும்பல் அரசாங்கம் என்ற பெயரில் நம் பணத்தை கொள்ளை அடிக்க ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது .. அந்த திட்டம் தான் 12.36 % சேவை வரி .அதாவது நம் இந்திய ரூபாய் மதிப்பில் ,
ரூ . 100 க்கு - ரூ .12.36.
ரூ. 1000 க்கு - ரூ . 126.36
ரூ. 10000 க்கு - ரூ. 1236.
ரூ. 100000 க்கு - ரூ. 12360.
சேவை வரியாக செலுத்த வேண்டும் ..நம்ம அரசாங்கம் நமக்கு எந்த சேவை பண்ணி கிளிச்சானுங்கனு இந்த சேவை வரி கேக்குரானுங்கனு .தெரியல.
என்ற ஓர் செய்தியினை பலரும் பலருகக்கும் ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தி உண்மையா? என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
உண்மை என்ன?
வெளிநாட்டில் இருந்து பணமாக வங்கிக்கு அனுப்பும் போது எந்த வித வரியும் உங்களுக்கு கிடையாது. அது உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
பாரின் எக்ச்சேஞ்ச் செய்ய சேவை கட்டணம் வரும் அவ்வளவுதான் அந்த கட்டணம் கூட 10000 ரூபாய்க்கு ரூபாய் 54 ஆகும்
அட்மீன் மிடியா ஆதாரம்
மேலும் விபரங்களுக்கு
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு முறைகள் பார்க்க
பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்.
Tags: மறுப்பு செய்தி