வெள்ளை கொடியுடன் வந்த பாகிஸ்தான் ராணுவம்: வீடியோ வெளியீடு!
அட்மின் மீடியா
0
கடந்த 10-ஆம் தேதி ஹாஜிபூர் செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நுழைந்து இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. நம் இந்திய வீரர்கள் சரியான பதிலடி கொடுத்தனர்.
அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டனர். இந்திய எல்லையில் வெள்ளைக் கொடியுடன் வந்த பாகிஸ்தான் வீரர்கள் அவர்களின் உடல்களை எடுத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.