Breaking News

திருமண நிதியுதவி பெற அரசு அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கும் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0
திருப்பத்தூர் அருகே திருமண நிதியுதவி பெற அரசு அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை பகுதியை சேர்ந்த  குமரேசன் இவர் சத்யா என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் திருமண நிதியுதவிக்காக கந்திலி ஒன்றிய திருமண திட்ட விரிவாக்க அலுவலரான ’ராமக்கா’விடம் அவர்கள் மனு அளித்திருந்தனர்.

ஆனால் ஒரு வருடமாக திருமண நிதியுதவி வழங்க காலம் தள்ளிவந்தார் ராமக்கா.



இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குமரேசனைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அவர் திருமண நிதியுதவி வழங்க ரூபாய் 3500 லஞ்சம் கேட்டுள்ளார்

 இதனையடுத்து குமரேசன் திருமண திட்ட விரிவாக்க அலுவலரான ராமக்காவிற்கு 3500ரூபாய் பணம் கொடுத்ததை ரகசிய கேமரா மூலம் பதிவு செய்துள்ளார்.

அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் அதனைப் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது.


 அட்மின் மீடியா வாசகர்களுக்கு அந்த வீடியோ


மறக்காம நம்ம யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்க

Share this