Breaking News

திருமண பத்திரிக்கை செய்தி உண்மையா?

அட்மின் மீடியா
5
கடந்த சில நாட்களாக சமூக வலை தளங்களில் ஓர் செய்தியினை பலரும் ஷேர் செய்கின்றார்கள்





அந்த செய்தி என்னவென்றால் சில புகைப்படங்கள் அதில் இந்த பெண் முஸ்லீம் பெண், அந்த ஆண் இந்து என்றும் அவர்களுக்கு இந்து முறைப்படி திருமணம் நடக்க உள்ளது


இந்த செய்தியை இஸ்லாமிய அமைப்புகள் அனைவருக்கும் அனுப்பி வைத்தால் இந்த திருமணத்தை நிறுத்த முடியும்.! இன் ஷா அல்லாஹ்.


என்று பலரும் ஷேர் செய்கின்றார்கள்


அந்த செய்தி உண்மையா? பொய்யா? என்பதை விடுங்க


இது போல் வரும் செய்தியினை ஷேர் செய்தால் என்ன லாபம் கிடைக்கும்


சரி ஷேர் செய்துடலாம் என்ன நடக்கும்


உங்கள் மனதில் கை வைத்து சொல்லுங்கள் நம்ம குடும்பத்தை சேர்ந்த ஒருவர் இது போல் செய்தால் நாம் ஷேர் செய்வோமா?


நாம் செய்யாத ஒன்றை மற்றவர்களை செய்ய சொல்வது  தான் மார்க்கம் கற்றுத்தந்த  வழியா? நியாயமா சொல்லுங்கள்


அந்த செய்தியினை நீங்கள்  ஷேர் செய்வதால் அந்த பெண்னுக்கு அசிங்கமோ அவமானமோ இல்லை
மாறாக அந்த பெண்னின் குடும்பத்தாருக்கும் இஸ்லாத்திற்க்கும் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்


இந்த செய்தியை மற்றவர்களுக்கு அனுப்பினால் திருமணத்தை நிறுத்தலாமா?


உடம்பில் முதுகெலும்பு இருக்கும் ஆண் செய்யும் வேலையா இது?


ஒரு வேலை உங்களுக்கு அந்த பெண்ணை காப்பாற்றவோ அல்லது திருமணத்தை நிறுத்தவோ  எண்ணம் இருந்தால் அந்த இடத்திற்க்கு சென்று அழகிய முறையில் எடுத்து சொல்லுங்கள்
அல்லது அந்த பத்திரிகையில் இருக்கும் எண்ணிற்கு போன் செய்து இது உண்மையா என உறுதி செய்திருக்கலாம் அல்லவா?

சோம்பேரி தனத்தின் உச்ச கட்டத்தில் இது போல் நீங்கள் செய்யும் காரியத்திற்காக அல்லாஹ்விடத்தில் நிச்சயம் பதில் கூறியே ஆக வேண்டும்.


முஸ்லிம்களை இழிவுப் படுத்த துடிக்கும் சிலர் செய்யும்  செயலுக்கு நீங்கள் 
துணை போகலாமா...

யார் இஸ்லாத்தை விட்டு வெளியேறினாலும் இஸ்லாத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. மார்க்கம் மிக தெளிவானது, 


Forward என்ற பெயரில் நீங்கள் செய்யும் இந்த ஒரு விரல் பாவத்தை நிறுத்தி கொள்ளுங்கள்.


இந்த சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் மிக பெரிய உதவி அதுவாக தான் இருக்க முடியும்.

மேலும் அட்மின் மீடியா சார்பில் அந்த பத்திரிக்கையில் உள்ள போன் நம்பருக்கு கால் செய்து பார்த்ததில் அந்த திருமணத்திற்க்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை என்றும் அவர்கள் யார் என்று தெரியவில்லை என்றும் கூறுகின்றார்கள்

மேலும் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய

https://www.adminmedia.in/2019/03/blog-post_34.html

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

5 Comments

  1. ஆம்.சஹோ நம் மக்கள் இன்னும் திருந்த வில்லை...
    தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காலி சட்னி என்பதுபோல் செயல்படுகிறார்கள்..
    எனக்கும் இந்த செய்தி வேறு பத்திரிக்கையுடன் வந்தது அதுவும் ஒரு காபீர் வாட்சாப் குரூப்பில்.
    நான் அதை கண்டுகொல்ல வில்லை எப்படியும் இதை வேண்டும் என்று தான் எவனோ செய்திருப்பான் என்று புரிந்துகொண்டேன்.
    அல்லாஹ் விடம் நான் ஒப்படைத்துவிட்டேன்....
    அதுவுன் இதைப் போன்ற செய்திகல் உங்கள் இணையதளம் இருப்பதால் தான் எங்கலை போன்ற மக்கலுக்கு உண்மை எது பொய் எது என்று விளங்கிய கொல்லமுடிகிறது...நன்றி நன்றி 👍..

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. பகிர்வு மீள்பகிர்வு செய்பவர்கள் இறைவனை பயந்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. எதையும் உண்மைத்தன்மை அரியாமல் பரப்பக்கூடாது என சொல்லும் நீங்களும் இதை பரப்பி தானே உள்ளீர்!!!


    இதை பரப்புவதன் நோக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும்

    கல்லூரி படிக்கும் பெண்கள் இஸ்லாமிய நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    அன்னிய ஆண்களோடு பழகக்கூடாது,இருபாலர் படிக்கும் கல்லூரியில் பயில கூடாது இஸ்லாம் அல்லாதவர்களை திருமணம் செய்யக்கூடாது போன்ற படிப்பினையும் முன் காவிகளின் சூழ்சிகளும் எச்சரிக்கைகளும் இதில் உள்ளது என்பதை விளங்கி கொள்ள வேண்டும் என்பதற்க்காக தான் இது பெரும்பாலும் பகிறப்படுகிறது என்பதை விளங்க வேண்டும்.

    ReplyDelete