Breaking News

அல்லாஹ்வின் கோப பார்வை பட்ட புத்ததுறவி செய்தியின் உண்மை என்ன

அட்மின் மீடியா
0
"அல்லாஹ்வின் கோப பார்வையிலிருந்து எவனும் தப்ப முடியாது. இந்த படத்தில் இருப்பவன் பர்மாவின் புத்தமத வெறியன்.இவன் பர்மாவில் சமீபத்தில் நடத்தியகொடூர செயல்கள் பர்மா முஸ்லீம் மக்களை உயிரோடு எரித்தவன் எத்தனையோ முஸ்லிம்களை கற்பழித்து கொலை செய்தும்பெற்றோல் ஊற்றியும் எரித்த காமுகன். சிறிய பிள்ளைகளையும் பெரியவர்களையும் உயிரோடு எரித்த மிருகம் இவன்.
அல்லாஹ் விடுவானா இவனுக்கு இப்படியொரு உருவகேட்டை இந்த நாய்க்குகொடுத்திட்டான்.
இதை எல்லோருக்கும் பரப்பவும். இஸ்லாமிய மக்களுக்கு கேடுவிளைவிகௌகும் எவனும் அல்லாஹ்வின் பார்வையிலிருந்து தப்பமாட்டான். இதைபார்த்தாவது திருந்தட்டும் நம் சமுதாய மக்களுக்கு தீமை செய்ய நிணைப்பவர்கள்."





என்று ஒரு செய்தியினையும் ஒரு புத்ததுறவியின் படத்தையும் பலரும் சமூகவலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள்


அந்த செய்தி உண்மையா என்று அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யான செய்தியாகும்


பர்மாவில் முஸ்லிம்களை அங்குள்ள புத்த மதத்தை சார்ந்தவர்கள் பெரும் கொடுமைகள் செய்ததும் அதை தொடர்ந்து உலகெங்கும் இருக்கும் முஸ்லிம்கள் கடும் கண்டனம் தெரிவித்தது நம் அனைவருக்கும் தெரியும்.


இந்த சம்பவத்தை தொடர்ந்து மேலே குறிப்பிட்ட பதிவும் அத்துடன் ஒரு இமேஜும் வலைதளங்களில் பெரும் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது.


ஆனால் இந்த பதிவு உண்மை தன்மை என்னவென்றால், அந்த முதியவர் நரம்பு தளர்ச்சி மூலம் பாதிக்கப்பட்டு தோலில் ஒருவகையான நோய் தாக்கியுள்ளது. 

ஆனால் இந்த செய்தி வலைதளத்தில் வேறு விதமாக பரவி வருகிறது.


பர்மாவில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் நிச்சயமாக கண்டனத்துக்கு உரியது. அதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகும்.
அதற்காக பொய்யான இது போன்ற செய்தியை பரப்புவது ஏற்புடையது அல்ல.


ஆதாரம்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback