தபால் துறை தேர்வு ரத்து
ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடந்த அஞ்சல் துறை தேர்வு ரத்து!
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மீண்டும் தேர்வு
கடந்த ஞாயிறு அன்று நடந்த அஞ்சல் துறை தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் நடந்த நிலையில், இந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இத்தேர்வு தமிழ் உட்பட 15 பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட்ட நிலையில், தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்பு கடந்த 11-ம் தேதி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தபால் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழகத்திலிருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், திடீரென தமிழ் மொழி நீக்கப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.