Breaking News

5 ஆண்டுகளுக்கு மேல் நத்தம் புறம்போக்கில் குடியிருந்தால் பட்டா

அட்மின் மீடியா
0
நத்தம் புறம்போக்கு குடியிருப்புகள்: அரசாணைப்படி பட்டா வழங்க நடவடிக்கை: தமிழக அரசு அறிவிப்பு




நத்தம் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை முறைப்படுத்தி பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது
புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பல்வேறு நிகழ்வுகளின் அடிப்படையில் பட்டாக்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.


நத்தம் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை முறைப்படுத்தி பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக அரசு சார்பில் இரண்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.


தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக இந்த உத்தரவுகளைச் செயல்படுத்த முடியாத நிலை இருந்தது.


இப்போது அந்த உத்தரவுகளின் அடிப்படையில் குடியிருப்புகள் முறைப்படுத்தப்படும்


5 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சேபகரமற்ற குடியிருப்பில் குடியிருந்தால் அவர்களுக்கு அரசு பட்டா வழங்கு உரிய நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

Give Us Your Feedback