Breaking News

வாட்ஸப் உபயோகிப்பாளர்களே கட்டாயம் இதை படியுங்க

அட்மின் மீடியா
0
வாட்ஸப் உபயோகிப்பாளர்களே கட்டாயம் இதை படியுங்க


சமீபத்தில் மணிப்பூரைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவருக்கு $5000  டாலர் சுமார் 3 லட்சம் பண அன்பளிப்புடன் ஃபேஸ்புக்கின் ஹால் ஆஃப் ஃபேம்லும் இடமளித்துக் கெளரவித்திருக்கிறது ஃபேஸ்புக் நிறுவனம்.

எதற்காக இப்படி செய்தது


அந்த இளைஞர் வாட்ஸ் அப் செயலியில் சாட் செய்து கொண்டிருந்த போது, திடீரென அந்த செயலியில் இருந்து, நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் நபருடன் விடியோ சாட் செய்ய உங்களுக்கு ஆசையா? அப்படியெனில் விடியோ ஆப்சனைக் க்ளிக் செய்யுங்கள். என்று நோட்டிஃபிகேஷன் வந்துள்ளது.

இது ஹேக்கர்கள் செய்யும் வேலை. நிச்சயமாக வாட்ஸப் அப்படியொரு நோட்டிஃபிகேஷன் அனுப்பியிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அதன் பிரைவஸி ஆப்ஷன் அடிப்படையில் அப்படிச் செய்ய இயலாது. சாட்டில் ஈடுபட்டிருக்கும் இருவரும் விரும்பினால், அனுமதி கேட்டுக் கொண்டு தான் விடியோ சாட் ஆப்ஷன் ஓப்பன் ஆகும். ஆனால், மணிப்புரி இளைஞர் விஷயத்தில் அப்படியில்லாமல், எதிர்ப்பக்கத்தில் இருக்கும் நபருக்கே தெரியாமல் விடியோ சாட் விண்டோ ஓப்பன் ஆகியிருக்கிறது.


இது முற்றிலும் ஆபத்தானது. இதைப் பற்றி ஃபேஸ்புக் அறிந்திருக்க வாய்ப்பில்லை எனக்கருதி, நடந்து கொண்டிருக்கும் தவறைச் சுட்டிக் காட்டி அவர், ஃபேஸ்புக்  Bug Bounty Program குக்கு மெயில் அனுப்பினார்.



ஹேக்கர்கள் மூலமாக இப்படியான திருட்டு வேலைகள் அத்துமீறி நடப்பதை உணர்ந்து கொண்ட ஃபேஸ்புக் நிறுவனம், தவறைச் சுட்டிக்காட்டியதற்கு வெகுமானமாக மணிப்புரி இளைஞருக்கு $5000 பரிசுத்தொகை அனுப்பியதுடன் அவருக்கு ஃபேஸ்புக்ஹால் ஆஃப் ஃபேமிலும்இடமளித்துக் கெளரவித்திருக்கிறது.

எனவே  சமூக ஊடகச் செயலிகளைப் பயன்படுத்தும் போது ஏதாவது நோட்டிஃபிகேஷன்கள் வந்தால், அதை ஓக்கே  செய்யாமல் அது எதற்கு அனுமதி கேட்கிறது என்று ஒரு நொடி சிந்தித்து செயல்படுங்கள்

அப்படி நீங்கள் ஓக்கே செய்யும் பட்சத்தில் உங்கள் பொபைல் போன் ஹேக் செய்யபடவு வாய்ப்பு உள்ளது எனவே எச்சரிக்கை அவசியம்


Give Us Your Feedback