Breaking News

பின்லேடனிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்டதா

அட்மின் மீடியா
0
அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் இரட்டை கோபுர தாக்குதலுக்கும் பின் லேடனுக்கும் தொடர்பு இல்லை என்று சி.ஐ.ஏ கண்டறிந்துள்ளதாகவும் இது தொடர்பாக அமெரிக்கா மன்னிப்பு கோரியுள்ளதாகவும் ஒரு செய்தி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.



இது உண்மையா என்று அட்மின் மீடியா களம் இறங்கியது

இந்த செய்தியினை கீழ் கண்ட இனையதளம் வெளியிட்டுள்ளது


2001ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரண்டு கோபுரங்கள், பெண்டகன் மீது விமானங்களை மோதச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டது. 

இந்த தாக்குதலுக்கு அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. 

ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின்லேடன் மறைந்து வாழ்வதாக குற்றம்சாட்டி அந்நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. கடைசியில், பாகிஸ்தானில் வாழ்ந்துவந்த பின்லேடனை 2011 மே 1ம் தேதி அமெரிக்கா மிகவும் ரகசியமாக சென்று தாக்கி கொன்றது.

இந்த நிலையில், அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கும் பின்லேடனுக்கும் தொடர்பு இல்லை என்று அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ கண்டறிந்துள்ளதாகவும் இதற்காக பின்லேடனிடம் அமெரிக்கா மன்னிப்பு கோரியதாகவும் திஆனியன்.காம் என்ற அமெரிக்க இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.


மேலும், பின்லேடனிடம் மட்டுமல்ல… அவரது குடும்பத்தினர், அவர் பக்கம் நின்ற அவரது தோழர்கள் ஒவ்வொருவரிடமும் அமெரிக்கா மன்னிப்பு கேட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இனி, ஒசாமா பின்லேடனை திரும்பத் தர முடியாது… ஆனால், அவர் குடும்பத்தினர் அனுபவித்த வலி மற்றும் கஷ்டங்களுக்கு ரூ.18 மில்லியன் டாலர் இழப்பீடாக அமெரிக்கா தர உள்ளது, என்று கூறப்பட்டு இருந்தது.


இந்த செய்தி உண்மை இல்லை யாரும் நம்பவேண்டாம்


ஆதாரம்




எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


மேலும் ஆனியன் இனையதளம் பற்றி  விக்கிப்பீடியா இதை நையாண்டி இதழாகவே குறிப்பிட்டுள்ளது.

Tags: மறுப்பு செய்தி

Share this