Breaking News

பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்விற்கு, தனி தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அட்மின் மீடியா
0
பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்விற்கு, தனி தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
 
 

பத்தாம் வகுப்பு மார்ச் 2019 பொது தேர்வில் தோல்வி அடைந்தோர், எழுதாதவர்களுக்காக வரும் ஜூன் 14ம் தேதி முதல் 21ம் தேதிவரை சிறப்பு துணை பொது தேர்வு நடக்கிறது. தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அவரவர் பயின்ற பள்ளிகள், தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலம் ஆன்-லைனில் வரும் 10ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.


தனியார் பிரவுசிங் மையங்கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது. தேர்வு கட்டணத்தை 125 ரூபாய் மற்றும் ஆன்-லைன் பதிவு கட்டணம் 50 ரூபாய் சேர்த்து மொத்தம் 175 ரூபாயை ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் பள்ளிகள், தேர்வு மையங்களில் பணமாக மட்டுமே செலுத்த வேண்டும். தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்துள்ள தேர்வு மையம் பற்றி தேர்வுக்கூட அனுமதி சீட்டில் அறிந்து கொள்ளலாம். 

தேர்வர்களுக்கு தேர்வு எழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது. தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்த பின், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback