இந்து நோயாளிக்காக ரம்ஜான் நோன்பை கைவிட்ட முஸ்லிம் இளைஞர்..
அட்மின் மீடியா
0
இந்து நோயாளிக்காக ரம்ஜான் நோன்பை கைவிட்ட முஸ்லிம் இளைஞர்..
நண்பருக்கு ரத்த தானம் செய்ய ரமலான் நோன்பை அசாம் இளைஞர் ஒருவர் கைவிட்ட சம்பவம் அவரது மனிதநேயத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.
அசாம் மாநிலம் மங்கல்டோய் பகுதியைச் சேர்ந்த பனாவுல்லாஅகமது
மனிதநேயம் என்ற பேஸ்புக் குழுவை இயக்கி வருகின்றனர். ரத்ததானம் செய்பவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தகவல்களை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் ரம்ஜான் மாதம் என்பதால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நோன்பு தொடங்கியது. பனாவுல்லா முஸ்லிம் என்பதால் அவர் தற்போது ரம்ஜான் நோன்பு தொடங்கியுள்ளார்.
ராஜன் என்பவருக்கு கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ரத்தம் உடனடியாக தேவைப்பட்டது தெரிந்து தங்கள் பேஸ்புக் பக்கத்தில் உள்ள ரத்ததானம் அளிப்பவர்களை தொடர்பு கொண்டனர். அதில் சிலர் வந்து ரத்தம் கொடுக்க இயலாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து அகமது அதே ரத்தவகையை சேர்ந்தவர் என்பதால் அவர் கொடுக்கலாம் என நினைத்தார். பொதுவாக முஸ்லிம் சகோதர சகோதரிகள் ரம்ஜான் நோன்பு இருக்கும்போது அவர்களது ரத்தம் சிந்தக் கூடாது அப்படி இருந்தால் நோன்பு முறிந்து விடும்
இதையடுத்து ஒரு உயிரை காக்க நோன்பை கைவிடுவது என முடிவு எடுத்தார் அகமது. பின்னர் நோன்பை கைவிட்டுவிட்டு ரத்தம் கொடுத்தார். இதனால் அந்த நோயாளியின் உயிரும் காக்கப்பட்டது.
இதுகுறித்து அகமது கூறுகையில் ரத்தம் கொடுக்க வேண்டும் என முடிவுவெடுத்தவுடன் எனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை. உடலளவில் ஆரோக்கியமாக இருப்பவர்கள் அனைவரும் ரத்தம் கொடுக்க தகுதியானவர்கள். ரத்த தானம் என்பது கடவுளுக்கு செய்யும் தொண்டை போன்றது என்றார்.
இஸ்லாமியர்கள் என்னதான் மனித நேயத்தை காக்க மாங்கு மாங்கென்று தேடி போய் உதவினாலும் எங்களுக்கு குத்தப்படும் முத்திரையானது
தீவிரவாதி…
பயங்கரவாதி…
தேச துரோகி…
இப்படி பொய்யான இழிப்பெயரை சுமந்தும் அவற்றினை குப்பையில் எரிந்து விட்டு சற்றும் சோர்வடையாமல் தொடர்ந்து உதவி கரங்கள் நீட்டியவாரு எங்களுடைய பாதங்கள் முன்னேறி சென்றுக்கொண்டே இருக்கும்.
இஸ்லாம் கூறும் மனிதநேயத்தை எடுத்துரைக்கும் விதமாக உலக மக்களுக்கு அருட் கொடையாக வழங்கப்பட்ட உலக பொதுமறையான திருமறை திருக்குர்ஆனின் அத்தியாயம் 5 - 32 வது வசனத்தில்..
“ஒரு மனிதனை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்”
என்று கூறியதன் அடிப்படையில் முஸ்லிம்களாகிய நாங்கள் இரத்தம் எடுப்பவர்கள் அல்ல, இரத்தம் கொடுப்பவர்கள்.
"மண்ணில் உள்ள மனிதரை நீ நேசித்தால், விண்ணில் உள்ள இறைவன் உன்னை நேசிப்பான்"
என்ற நபிகள் நாயகம் கூறிய மனிதநேய ரத்தின சொற்களை எடுத்து கூறி தீவிரவாததிற்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை, பிறரை நேசிப்பது மூலமே இறைவனின் நேசத்தை பெறலாம் என்ற கூற்றுப்படியே எங்களுடைய வாழ்க்கையும் இருக்கும்.