மொபைல் போனில் இருந்து உங்கள் கண்களை பாதுகாக்க ஒரு ஆப் உடனே டவுன்லோடு செய்யுங்க
அட்மின் மீடியா
0
ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் கண்கள் பாதிப்படைகிறதா? கண்களை பாதுகாக்க ஒரு ஆப்
இன்று அனைவரும் பயன்படுத்திவரும் ஆண்ட்ராய்டு போனினை அதிக நேரம் வெளிச்சம் குறைந்த ஒரு இடத்தில் அல்லது இரவு நேரங்களில் நீங்கள்
உங்கள் ஸ்மார்ட்போனை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது அதன் திரையில்
இருந்து வெளிப்படும் நீல நிற கதிர்களானது உங்கள் கண்களை பாதிக்கின்றது.
இதனால் தூக்கமின்மை, ஒற்றைத்தலைவலி உட்பட இன்னும் பல ஏராளமான உடல் சார்ந்த
பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
ஆப் டவுன் லோடு செய்ய
இதனை கட்டுப்படுத்ததான் உங்கள்
ஸ்மார்ட் போனின் திரையில் இருந்து வெளிவரும் நீல நிற கதிர்களை
கட்டுப்படுத்தி உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
Twilight செயலியை பயன்படுத்துவது எப்படி?
- Twilight செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்
- ஆப்பின் வலது கீழ் மூலையில் வழங்கப்பட்டிருக்கும் சிவப்பு நிற Play பட்டனை அழுத்தினால் போதும் இனி Twilight செயலி துவங்க ஆரம்பித்துவிடும். உங்கள் கண்கள் பாதுகாக்கப்படும்.
- Twilight செயலியின் உதவியுடன் திரையில் இருந்து வெளிப்படும் பிரகாசம் மற்றும் நிறம் போன்றவற்றினை உங்கள் வசதிக்கு ஏற்றாட் போல் மாற்றியமைக்க முடியும்.
- நாள் முழுதும் அல்லது குறிப்பிட்ட ஒரு நேரத்தில் மாத்திரம் அல்லது சூரிய உதயம்/அஸ்தமனம் போன்றவற்றிற்கு ஏற்ப Twilight செயலியை இயங்கச் செய்ய முடியும்.
சந்தர்பத்திற்கும் தேவைக்கும் ஏற்றாட் போல், திரையில் இருந்து
வெளிப்படும் பிரகாசத்தின் அளவுகளை உள்ளடக்கியதாக தனித்தனியான ப்ரொபைல்
உருவாக்கி பயன்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது.
Tags: தொழில்நுட்பம்