Breaking News

சமூக வலைதளங்களில் வரும் மருத்துவ செய்திகளை நம்பாதீர்கள்

அட்மின் மீடியா
0
✍🏻 *வாட்ஸப் மற்றும் பேஸ்புக்கில் வரும் மருத்துவ செய்திகளை நம்பாதீர்கள்*

👇🏼 *போலியான கவர்ச்சி விளம்பரங்கள் சில*

🛡 கேன்சருக்கு இலவச மருந்து இங்க வாங்க

🛡 இருதய அடைப்புக்கு சிகிச்சை  இங்க வாங்க

🛡கிட்னி பெயிலியரா சிகிச்சைக்கு இங்க வாங்க 

டெங்குகாய்சலா இந்த மருந்து சாப்பிடுங்க

பன்றிகாய்சலா இந்த மருந்து சாப்பிடுங்க

🛡 சிறுநீரகத்தில் கல்லா இந்த மருந்த சாப்பிடுங்க உடனே சரியாகிவிடும்


✍🏻 *உங்களுக்கு இந்த பிரச்சனையா இந்த மருந்து  சாப்பிடுங்க உடனே சரியாகிவிடும்*

✍🏻 என்று பல செய்திகளை பார்த்திருப்போம்

🔰 *இது போன்ற செய்திகள் அனைத்தும் போலியானதாகவும் தவறான தகவல்கள் உள்ளதாகவும் இருக்கின்றன.*

மேலும் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தார்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் டாக்டரிடம் செல்வீர்களா அல்லது வாட்ஸப்பில் இந்த மருந்து சாப்பிட்டா சரியாகிவிடும் என்று செய்தி பார்த்தேன் என்று அந்த மருந்து சாப்பிடுவீர்களா

💊 பொதுவாக மருந்துகளை பொருத்த வரை டாக்டரின் ஆலோசனை பெற்றே மாத்திரை மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.இல்லையேல்  பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

💊 *மேலும் மருத்துவர் ஒருவருக்கு கொடுக்கும் மருந்தின் செயல்பாடு என்பது மருந்தின் அளவு, வயது, ஒருவரது எடை, கிருமியின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும். எனவே, ஒருவருக்கு எவ்வளவு மாத்திரை கொடுக்க வேண்டும் எத்தனை நாட்களுக்கு அதை எடுத்துக்கொள்ள, பரிந்துரைக்க வேண்டும் என்பது டாக்டருக்கு மட்டுமே தெரியும்.*

💊 *எனவே சமூக வலைதளங்களில் வரும் எந்த ஒரு மருத்துவ செய்திகளையும் நம்பாதீர்கள்*

💊 *அதுபோல ஏதேனும் ஒரு செய்தி வந்தால் அந்த செய்திகளை யாருக்கும் ஷேர் செய்யாதீர்கள்*

✍🏻 *நம் உறவுகள் மற்றும் நண்பர்களின்  விலைமதிக்க முடியா உயிர்களை இழக்க கூடும்*

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback