Breaking News

இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு வேலூர் சிப்பாய் புரட்சி

அட்மின் மீடியா
0
இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு
மறைக்கப்பட்ட வரலாறு​​​



வேலூர் சிப்பாய் புரட்சி​ நம்மில் பலருக்கும் இந்த வரலாறு தெரியாது​​​

இன்றைய சுதந்திர இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட முதல் புரட்சி
1806-ம் ஆண்டில் ஜூலை 10-ம் தேதி நடைபெற்றது.  

ஆனால் வரலாற்றில் இந்த வேலூர் சிப்பாய் புரட்சி பற்றி மறைக்கப்பட்டுவிட்டது

1857 மே 10-ம் தேதி செய்த கிளர்ச்சியை வரலாற்று ஆசிரியர்கள் சிப்பாய் புரட்சி என வர்ணிக்கின்றனர். 

ஆனால் இன்று வரை  வேலூர் சிப்பாய் கலகம் என்பதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது. 

மைசூரில் திப்பு சுல்தானுக்கும், ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்திற்கும் 1799 இல் நடந்த போரில் திப்புசுல்தான் தோல்வியுற்று மரணமடைந்தார்.
இந்தப் போரின் போது திப்புசுல்தானின் மகன்கள், மகள்கள் மற்றும் அவர்களது உறவினர்களையும் சிறைப்பிடித்த ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம் வேலூர் கோட்டையில் அவர்களைச் சிறைவைத்திருந்தது.


வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்ட திப்புசுல்தானின் வாரிசுகளைப் பாதுகாக்க 370 பேர் கொண்ட ஆங்கிலேய சிப்பாய்களும், 1500 இந்திய சிப்பாய்களும் இருந்தனர்.


இந்நிலையில், வெள்ளையரைப் போரில் வென்று மீண்டும் திப்புசுல்தானின் வாரிசுகளை மைசூர் அரியணையில் அமர்த்த வேண்டும் என்று திட்டமிட்டனர் திப்பு சுல்தான் குடும்பத்துக்கு விசுவாசமான முகம்மதியர்கள். இந்தச் சமயத்தில்தான் சென்னை மாநில ஆங்கிலேய படை தளபதி *ஜான் ரடாக்*என்பவர் சிப்பாய்களுக்கு புதிய தோல் தொப்பியை அறிமுகப்படுத்தினார்.


அது மாட்டுத் தோலால் செய்யப்பட்டு, மாட்டுக்கொழுப்பு பூசப்பட்டது என்று இந்து சிப்பாய்களும் பன்றித் தோலால் செய்யப்பட்டது என்று முஸ்லிம் சிப்பாய்களும் அந்த ஆணைக்குக் கட்டுப்பட மறுத்தனர். 



அத்துடன் வீரர்கள் நெற்றியில் விபூதி, நாமம் தரிக்கக் கூடாது, மீசையை ஒரே அளவாக வெட்டிக்கொள்ள வேண்டும், தாடி வளர்க்காமல் ஒட்ட மழிக்க வேணடும் என்றும் கூறப்பட்டது. இதனால் ஆங்கிலேயரைப் பழிவாங்கும் உணர்ச்சி இந்திய சிப்பாய்களிடம் மேலோங்கி நின்றது அவர்களுடைய உறவினர்களும், நண்பர்களும் அரச குடும்பத்தின் பணியாளர்களைப் போல் வேடமிட்டு, புரட்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். 

திப்பு குடும்பப் பாதுகாவலராக லெப்டினெண்ட் கர்னல் மேரியேட் இருந்தார். 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் நாள் இரவு இரண்டு மணிக்கு வேலூர் கோட்டையில் புரட்சி வெடித்தது. 

 இந்திய சிப்பாய்கள் சுபேதார் ஷேக் காதம், ஷேக் காசிம், சுபேதார் ஷேக் ஹுசைன் போன்றோர் தலைமையில் சிப்பாய்கள் அணிவகுத்து ஆங்கிலேய அதிகாரிகளை சுட்டுக் கொன்றனர்.  ஓரிரு ஆங்கிலேய அதிகாரிகள் மட்டுமே உயிர் தப்பினர்.

பிறகு புரட்சியாளர்கள் கோட்டையைக் கைப்பற்றினர். அதிகாலை 5 மணிக்குத் திப்புசுல்தானின் மூத்த மகன் மொய்சுதீன் சிறையில் இருந்து வெளியே வந்து வேலூர் கோட்டையின் மேல் பறந்த ஆங்கிலேயக் கொடியை இறக்கிவிட்டு திப்புசுல்தானின் புலி கொடியை ஏற்றினார். மேலும் திப்புசுல்தானின் மகன் அரசராக அன்றே அறிவிக்கப்பட்டார்.

 வெடிமருந்து தயாரிப்புக் கிடங்கும் அவர்கள் வசமானது. கட்டாய தலைப்பாகையை அமுல்படுத்திய கர்னல் மிக்கிராஸும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 வேலூர் கோட்டையின் வெளியில் இருந்த ஆங்கிலேயத் தளபதி காட்ஸ் என்பவர், வேலூர் கோட்டை கைப்பற்றப்பட்ட செய்தியை ஆற்காட்டில் இருந்த ஆங்கிலேய இராணுவ முகாமிற்குத் தெரிவித்தார். படைத்தளபதி கில்லஸ்பியின் தலைமையில் ஆற்காட்டில் இருந்து இராணுவம் வேலூர் கோட்டைக்கு விரைந்து வந்தது. 

கர்னல் கென்னடியின் பீரங்கிப்படையும் உடன் கோட்டைக்குள் புகுந்து  திடீர் தாக்குதல் நடத்தி கோட்டையை மீண்டும் கைப்பற்றியன. ஏராளமான புரட்சிக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

அன்று மட்டும் வெள்ளை ஏகாதிபத்தியப் படை கொன்று குவித்தவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டியது.  600 பேர் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை பெற்றனர்.

இந்த புரட்சியில் கொல்லப்பட்ட வீரர்களை வேலூர் கோட்டைக்குள் இருந்த கிணறு ஒன்றில் வீசி அக்கிணற்றை மூடியதாக வரலாறு  கூறுகிறது

கொலையுண்ட ஆங்கிலேய அதிகாரிகளின் உடல்கள் மீட்கப்பட்டு, கோட்டையின் எதிரே அடக்கம் செய்யப்பட்டு கல்லறைகள் எழுப்பப்பட்டன.
இன்றைக்கும் வேலூரில் அந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட ஆங்கிலேய அதிகாரிகளின் பெயர்கள் தாங்கிய கல்லறைகளை பொதுமக்கள் காண முடியும்.

உயிர் நீத்த புரட்சி வீரர்களின் நினைவாக வேலூர் மக்கான் பகுதியில் நினைவுத் தூண் ஒன்றும் உள்ளது.

Tags: இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு

Give Us Your Feedback