Breaking News

இ-பாஸ் மற்றும் இ-பதிவுக்கும் என்ன வித்தியாசம்? முழுவிவரம்

அட்மின் மீடியா
0

 இ-பாஸ் மற்றும் இ-பதிவுக்கும் என்ன வித்தியாசம்?

தமிழ்நாட்டில் இன்று முதல் மாவட்டங்களுக்குள் பயணம் செய்ய இ-பதிவு முறை கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இ-பதிவு முறையும், கடந்த வருடம் நடைமுறையிலிருந்த இ-பாஸ் முறையும் ஒன்றா? வாங்க தெரிந்து கொள்ளலாம்

அதாவது இபாஸ் என்பது வேறு - இ பதிவு என்பது முற்றிலும் வெவ்வேறு ஆகும். 

இ-பாஸ் முறை என்பது

இ பாஸ் என்பது எந்த இடத்திலிருந்து எந்த இடத்திற்கு செல்கிறோம், எதற்காக செல்கிறோம் போன்ற விவரங்களை தமிழக அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். 

பின்பு நீங்கள் பதிவு செய்த விண்ணப்பத்தை அதிகாரிகள் சரிபார்த்து நாம் குறிப்பிடும் காரணம் அத்தியாவசிய காரணமாக இருந்தால் அதனை ஏற்றுக்கொண்டு அனுமதி வழங்குவார்கள், 

ஒருவேளை நாம் விண்ணப்பிக்கும் போது சரியான ஆவணங்கள் அளிக்கவில்லை என்றாலோ, அல்லது தேவையற்ற காரணங்களாக இருந்தாலோ நம் இ பாஸ் அனுமதி மறுக்கப்படும்.


இ பதிவு முறை என்பது

ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கோ அல்லது மாவட்டத்திற்கு உள்ளேயோ செல்ல வேண்டும் என்றால் https://eregister.tnega.org/#/user/pass என்ற இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். 

அதில் சரியான தகவல்கள் அனைத்தையும் பூர்த்தி செய்தால் மட்டும் போதும் அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை  உடனடியாக உங்கள் பாஸ் டவுன்லோடு செய்து கொள்ளலாம்

மொபைல் மூலம் அனைத்து இ பதிவுகளும் விண்ணப்பிப்பது எப்படி என தெரிந்து கொள்ள

https://www.adminmedia.in/2021/04/blog-post_40.html


மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பதிவு பெற


வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் இ பதிவு பெற




வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் இ பதிவு பெற


இ பாஸ் தேவையில்லை.. இ பதிவு செய்தால் போதும்.. எப்படி விண்ணப்பிப்பது.. விளக்கமளித்த தமிழக அரசு!அறிவிப்பு


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback