Breaking News

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை யூடியூபர் நிஷாந்த் கைது முழு விவரம்

அட்மின் மீடியா
0

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை யூடியூபர் நிஷாந்த் கைது முழு விவரம்


கடந்த நான்கு நாட்களாக வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று காவல்துறையினரின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த நிஷாந்த், நேற்று (நவம்பர் 15) பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் பயணம் செய்துள்ளார். 

பேருந்தில் இருந்த நிஷாந்தை அடையாளம் கண்டுகொண்ட அந்தப் பேருந்தின் ஓட்டுநர், இது குறித்து உடனடியாக அதியமான்கோட்டை காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கொடுத்துள்ளார்.

ஓட்டுநர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், சேஷம்பட்டி அருகே அந்த ஆம்னி பேருந்தைத் தடுத்து நிறுத்தி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டதும் அதிர்ச்சியடைந்த நிஷாந்த், பேருந்தின் ஜன்னல் வழியாக குதித்து தப்பியோட முயன்றுள்ளார். 

ஆனால், சுதாரித்துக்கொண்ட காவல்துறையினர் அவரை சுற்றிவளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.இதையடுத்து, கைது செய்யப்பட்ட நிஷாந்திடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்தச் சம்பவத்தில் நிஷாந்தின் காதலியும் இன்ஸ்டா பிரபலமுமான மீனாட்சி (23) மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் (50) ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback