Breaking News

தமிழகம் முழுவதும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 2 தினங்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்..!

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 2 தினங்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்..!


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தங்கள் செய்ய வரும் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. 

01.10.2026 அன்று அல்லது அதற்கு முன்போ 18 வயது நிறைவடைந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத தகுதியுள்ள அனைவரும் பதிவு செய்யலாம். உங்கள் பகுதியில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் வாக்காளர் பதிவு, பெயர் சேர்த்தல், திருத்தங்கள், மற்ற சேவைகளை பெற பங்கேற்கலாம். மேலும் 1950 என்ற உதவி மைய எண்ணையும் அழைத்து சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம்

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகளை அறிவித்துள்ளது. 

இதற்காக நவம்பர் 2026-ல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. நவம்பர் 21, 22 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், நவம்பர் 29 ஞாயிற்றுக்கிழமையிலும் இந்த முகாம்கள் செயல்படும்.

அக்டோபர் 1, 2026 அன்று அல்லது அதற்கு முன்பாக 18 வயது பூர்த்தியடைந்த தகுதியுள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

2027-ம் ஆண்டில் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தியடைபவர்களும் முன்கூட்டியே விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது. 

இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 12, 2026 முதல் சமர்ப்பிக்கலாம்.புதிய வாக்காளர்கள் படிவம் 6-ஐயும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் படிவம் 6A-ஐயும் பயன்படுத்த வேண்டும். பெயர் நீக்கம் செய்ய படிவம் 7-ம், விவரங்கள் திருத்தம் செய்ய படிவம் 8-ம் பயன்படுத்தப்பட வேண்டும். 

விண்ணப்பங்களை ECINet செயலி மூலமாகவோ அல்லது voters.eci.gov.in என்ற இணையதளம் வழியாகவோ ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.

உங்கள் மொபைல் போன் மூலம் ஆன்லைனில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்று  பார்ப்பது எப்படி  

உங்கள் மொபைல் மூலம் வாக்காளர் அட்டை விண்ணப்பிப்பது எப்படி.. வாங்க தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க 

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யுங்கள்

வாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி? தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க 

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யுங்கள்

அல்லது கீழ் உள்ள ஆப் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் 

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யுங்கள்

உங்கள் Voter ID number ஐ பதிவிட்டு  SUBMIT என்ற option ஐ Click செய்யுங்கள் வாக்காளர் பட்டியலில் உங்கள் பாகம் எண் ,வரிசை எண், முகவரி போன்ற அனைத்து விவரங்களும் வரும். அப்படி வரவில்லை என்றால் உங்கள் வாக்காளர் அட்டை பதிவு நீக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம் உடனடியாக புதிய அட்டை வேண்டி விண்னப்பித்துகொள்ளுங்கள்.

how to apply for passport
how to apply for passport

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி Final voter list 2026

https://www.adminmedia.in/2026/02/final-voter-list-2026.html

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்க்க  - புதிய வாக்காளர் பட்டியல் PDF டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2026/02/pdf-new-voter-list-pdf-download.html

பொதுமக்கள், voters.eci.gov.in அல்லது electoralsearch.eci.gov.in ஆகிய இணையதளம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் ECI NET கைபேசி செயலி மூலமாக தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா ஒரே ஒரு SMS அனுப்பினால் போதும்  தேர்தல் ஆணையம் உடனே உங்கள் ஓட்டு விவரத்தை பதில் மெசஜாக அனுப்பும்

ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி 

https://electoralsearch.eci.gov.in/uesfmempmlkypo

https://electoralsearch.eci.gov.in/  click here

ஆகிய இணையதள முகவரி, வாக்காளர் உதவி கைபேசி செயலி ஆகியவற்றின் மூலம் ஆன்லைனிலும் சரிபார்த்து கொள்ளலாம்

ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி

முதலில் கீழே மேலே உள்ள  Link click செய்யுங்கள் அதில் Search by EPIC என்பதை கிளிக் செய்யுங்கள் 

அடுத்து மொழியை தேர்ந்தெடுக்கவும்

அதன்பின்பு உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் பதிவிடவும்

அதன் பின்பு உங்கள் மாநிலத்தினை தேர்ந்தெடுக்கவும்

அடுத்து கீழ் உள்ள கேப்சா கோடு சரியாக பதிவிட்டு சர்ச் என்பதை கிளிக் செய்யுங்கள் 

உங்கள் வாக்காளர் விவரம் அனைத்தும் வரும் அதில் உங்க Assembly constituency number, part number, part serial number  note பண்ணிக்கோங்க

அப்படி வரவில்லை என்றால் உங்களுக்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என அர்த்தம் மீண்டும் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

புதிய வாக்காளர் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண் தெரியாதவராக இருந்தால் SEARCH BY DETAILS ஆப்ஷனை க்ளிக் செய்யவும். 

அதில், தேர்தல் ஆணையம் கேட்டுள்ள தகவல்கள் அணைத்தையும் சரியாக பதிவிடவும். பின்னர் கேப்சாவை சரியாக பதிவிட்டு search ஆப்சனை க்ளிக் செய்யவும்

வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் அனைத்து தகவல்களும் சரியாக தெரியாது என்பவர்கள் மூன்றாவது ஆப்ஷனான SERACH BY MOBILE என்பதை க்ளிக் செய்யவும்.

இதில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை பதிவிட்டு, உங்கள் மொபைலுக்கு வரும் OTP ஐ எண்ணை உள்ளிட்டு, கேப்சாவை சரியாக டைப் செய்து search ஆப்சனை க்ளிக் செய்யவும்.

வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா என்பதை அறிய, '1950' என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம்!

உங்கள் மொபைல் போனில் மெசஜ் ஆப்பில் 

ECI <space> உங்கள் EPIC எண் 

(உதாரணம்: ECI TSK0000000) டைப் செய்து 

'1950' என்ற எண்ணிற்கு அனுப்பினால், 

அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும் அவ்வளவுதான்

ஒருவேளை தகவல் வரவில்லை என்றாலோ அல்லது பெயர் நீக்கப்பட்டிருந்தாலோ, உடனடியாகத் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாகவோ அல்லது அதிகாரிகளிடமோ முறையிடலாம்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback