ஜெயலலிதா, கலைஞர் ஆட்சி காலங்களில் நிறைவேறாத புதிய தலைமைச் செயலகம் வரலாற்று சாதனை படைப்பாரா CM விஜய்
ஜெயலலிதா, கலைஞர் ஆட்சி காலங்களில் நிறைவேறாத புதிய தலைமைச் செயலகம் வரலாற்று சாதனை படைப்பாரா CM விஜய்
ஜெயலலிதா, கலைஞர் ஆட்சி காலங்களில் நிறைவேறாத புதிய தலைமைச் செயலகம் தவெக ஆட்சியில் ஈடேறுமா என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
சென்னையில் உள்ள தலைமை செயலகம் கிழக்கிந்திய கம்பெனியால் 1640-1644 காலகட்டத்தில் கட்டப்பட்டது. 1652க்கு பின்னர் பிரிட்டிஷ் அரசில் அதிகாரப்பூர்வ தலைமையிடமாக திகழ்ந்தது. சுமார் 400 ஆண்டுகளாக நிர்வாக மையமாக திகழ்ந்து வருகிறது. 107 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் 4 ஏக்கர் மட்டுமே தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்திய கட்டுப்பாடு & தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தமிழக அரசால் விரிவுபடுத்த முடியாத நிலை இதுவரை நிலவுகிறது.
இந்த சூழலில் தமிழ்நாட்டிற்கு புதிய சட்டமன்றத்தை ரூ.1,200 கோடி மதிப்பில் கட்ட திட்டமிடுகிறார் முதல்வர் விஜய். 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், தோராயமாக 45 ஏக்கரில் அமைகிறது புதிய தலைமைச் செயலக வளாகம். அனைத்து வசதிகளுடன் திறன் மிக்க நிர்வாகத்தை உறுதி செய்ய இந்த ஆட்சியில் அமைகிறது
தமிழ்நாட்டின் எதிர்கால நிர்வாக வளர்ச்சிக்கும், திறன்மிக்க நிர்வாகத்டிற்கும் உலகத் தரத்திலான பொது நிர்வாக உள்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கிலும் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச்செயலகம் அடங்கிய புதிய கட்டடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தலைமைச் செயலகம் கட்ட பட்டினப்பாக்கம் மற்றும் கிண்டி உட்பட மூன்று இடங்களை பொதுப்பணி துறையினர் தேர்வு செய்தனர். இதில் பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க முதல்வர் விருப்பம் தெரிவித்துள்ளார்.என தகவல் வெளியாகி உள்ளது.புதிய தலைமைச் செயலகம். ஜெயலலிதா, கலைஞர் ஆட்சி காலங்களில் நிறைவேறாத புதிய தலைமைச் செயலகம், விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் ஈடேறுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்

