சிலிண்டர் மானியம் பெற ஆதார் சரிபார்ப்பு கட்டாயம் மத்திய அரசு அறிவிப்பு
சிலிண்டர் மானியம் பெற ஆதார் சரிபார்ப்பு கட்டாயம் மத்திய அரசு அறிவிப்பு
மானிய விலை சிலிண்டர் முன்பதிவுக்கு ஆதார் சரிபார்ப்பு கட்டாயம் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
வரும் அக்., 1ஆம் தேதி முதல் ஆதார் சரிபார்ப்பு செய்த பிறகே மானிய விலை சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியும். போலி இணைப்புகளை நீக்கும் நடவடிக்கையின் பாகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆதார் சரிபார்ப்பை முடிக்காதவர்கள் சிலிண்டர் நிறுவன செயலி அல்லது வினியோகஸ்தர்களை அணுகலாம்.
தகுதியுள்ள எந்த நுகர்வோருக்கும் மானிய விலை சிலிண்டரை தடுப்பது நோக்கம் அல்ல என கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 27.43 கோடி வாடிக்கையாளர்கள் ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடித்துள்ளனர். அவர்கள் மீண்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள தேவையில்லை. மற்ற வாடிக்கையாளர்கள் காஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும்போது, வினியோகஸ்தர் அலுவலகத்தில் அல்லது எண்ணெய் நிறுவனங்களின் மொபைல் செயலிகள் மூலம் சரிபார்ப்பை முடிக்க வேண்டும்.
வருகிற அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் தங்களது பயோமெட்ரிக் அங்கீகாரத்தை முடிக்காத நுகர்வாளர்களுக்கு மானிய விலையிலான சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படாது என்று மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன. எனவே, விடுபட்டுள்ள நுகர்வோர் உடனடியாக இந்தச் சரிபார்ப்பை முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Tags: தமிழக செய்திகள்