Breaking News

தமிழ்நாட்டு மக்களுக்காக அந்த அவமானத்தையும் தாங்குவேன்.. முதலமைச்சர் விஜய் உருக்கமான பேச்சு..!

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டு மக்களுக்காக அந்த அவமானத்தையும் தாங்குவேன்.. முதலமைச்சர் விஜய்..!



கர்நாடகா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சியை எடுத்தது நான்தான் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் உறுதியுடன் தெரிவித்தார். 

விவசாயிகளின் துயரங்களுக்கு ஏதேனும் ஒரு தீர்வு கிடைக்காதா என்ற ஒரே எண்ணத்தில்தான் அந்தத் தரப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அவர் விளக்கமளித்தார். 

பேச்சுவார்த்தையின் போது தமக்குச் சில அவமானங்கள் ஏற்பட்டாலும், தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்கிக்கொள்ளத் தான் தயாராக இருப்பதாக அவர் உருக்கமாகக் கூறினார்.

மாநிலத்தின் நலனைக் காப்பதில் தனிப்பட்ட கவுரவத்தைவிட மக்களின் வாழ்வாதாரமே முக்கியம் என்பதை அவரது இந்தச் பேச்சு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. சட்டப்பேரவையில் அவர் ஆற்றிய இந்த அதிரடியான மற்றும் உணர்ச்சிபூர்வமான கருத்துக்கள் எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது

தமிழக சட்டசபையின் 3-வது நாளான இன்று பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியுள்ள நிலையில், காவிரி பிரச்னையை கையில் எடுத்த தி.மு.க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தது.

அதனை தொடர்ந்து காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.

காவிரி விவகாரத்தில் துளியும் அரசியல் செய்யும் எண்ணம் இல்லை. மேகதாது அணை குறித்து நாம் அனைவரும் தீர்மானம் நிறைவேற்றினோம். அதை கடிதமாக பிரதமருக்கு அனுப்பியுள்ளோம். காவிரியில் நமது உரிமையை அரசு விட்டுத்தராது. பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும் என்று தான கர்நாடகா செல்ல திட்டமிட்டோம். அங்கு ஏதேனும் அவமானம் நேர்ந்திருந்தால் கூட தமிழக மக்களுக்காக அதை ஏற்றுக்கொள்ள நான் தயார் என்று பதில் அளித்துள்ளார்.

பகை நாடுகளே பிரச்னையை பேசி தீர்க்க பார்க்குறாங்க.. அதனாலதான் காவிரி விவகாரத்தில் பக்கத்து மாநிலத்தோட பேசிப் பார்த்தா என்னன்னு நினைச்சேன் - காவிரிப் பிரச்சினையில் கர்நாடக மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முதல் முயற்சியைத் தாம்தான் எடுத்ததாகவும் பல ஆண்டுகளாகத் தொடரும் இந்த நீர்ப் பங்கீட்டு விவகாரத்தில் ஏதேனும் ஒரு வழியில் சுமூகமான தீர்வு கிடைக்காதா என்ற நேர்மறையான எண்ணத்திலேயே அந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பேச்சுவார்த்தை முன்னெடுப்பால் அரசியல் ரீதியாக ஏதேனும் பின்னடைவோ அல்லது அவமானமோ ஏற்பட்டால், அதைப் பற்றித் தான் கவலைப்படப் போவதில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், நமது மாநிலத்தின் பாசன உரிமைகளுக்காகவும் அப்படி ஒரு அவமானம் ஏற்பட்டால், அதையும் தாங்கிக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன்" என்று முதல்வர் விஜய் உருக்கமாகப் பதிவு செய்தார்.

அரசியலைத் தாண்டிய அணுகுமுறை: சுயமரியாதை மற்றும் அரசியல் விமர்சனங்களை விடத் தமிழ்நாட்டு மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே அரசின்

முதன்மையான கடமை என்பகை முதலமைச்சரின் இக்கூற்று தெளிவுபடுத்துகிறது

தமிழகத்தின் உரிமைகளுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் அரசு தொடர்ந்து தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை அவர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback