Breaking News

காசா போர் நிறுத்தம் குறித்த 15 அம்ச அதிபர் டிரம்ப் கோரிக்கையை நிராகரித்தார் இஸ்ரேல் பிரதமர்..!

அட்மின் மீடியா
0

காசா போர் நிறுத்தம் குறித்த 15 அம்ச அதிபர் டிரம்ப் கோரிக்கையை நிராகரித்தார் இஸ்ரேல் பிரதமர்..!

காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.

கடந்த 2023 அக்டோபர் 7 அன்று, காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து, ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கையில் காசாவில் 73,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடர்ந்து தாக்குதல் நடந்துவருகிறது. கடந்த அக்டோபர் மாதம் போர்நிறுத்தத்திற்குச் சம்மதித்த பிறகும் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. 

இந்த நிலையில் இருதரப்பும் டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டமான 15 அம்சக் ஆவணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்." என அமெரிக்காவின் 'சமாதான வாரியம்' (Board of Peace) அறிவித்திருந்தது.

இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) ஹமாஸ் ஆயுதங்கள் களையப்படும் வரை தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள முடியாது எனக் கூறி அதனை நிராகரித்துள்ளார்.

இதுகுறித்து தனது அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், "இதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்: 15 அம்சங்களைக் கொண்ட அந்த ஆவணத்தை இஸ்ரேல் நிராகரிக்கிறது.

நீங்கள் அதை சொல்லவில்லை என்று சிலர் கூறுவதை நான் கேட்டேன். எனவே அதை நான் மீண்டும் இங்கே கூறுகிறேன். ஹமாஸ் ஆயுதங்கள் களையப்படும் வரை இஸ்ரேலியப் படைகள் எந்தவொரு படைகளையும் திரும்பப் பெறும் நடவடிக்கையை மேற்கொள்ளாது" என்றார்.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback