13 ம் தேதி கர்நாடகாவில் பந்த் 10 ம்தேதி கர்நாடகா-தமிழ்நாடு எல்லையை மூட வேண்டும் என வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு Vatal calls for closure of Karnataka-T.N. border at Attibele on Monday
அட்மின் மீடியா
0
13 ம் தேதி கர்நாடகாவில் பந்த் 10 ம்தேதி கர்நாடகா-தமிழ்நாடு எல்லையை மூட வேண்டும் என வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு Vatal calls for closure of Karnataka-T.N. border at Attibele on Monday
2026 ஆகஸ்ட் 13 கர்நாடகாவில் பந்திற்கு முன்னதாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், வாகனங்களைத் தடுப்பதற்காக, ஆகஸ்ட் 10, திங்கட்கிழமை காலை 11:00 மணிக்கு அட்டிபெலேயில் உள்ள கர்நாடகா-தமிழ்நாடு எல்லையை மூட வேண்டும் என நாகராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தை கண்டித்து திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 13ம் தேதி கர்நாடகா பந்த் நடத்தப்படும். அதற்கு முன்பாக தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி கர்நாடகா - தமிழ்நாடு எல்லையான அத்திப்பள்ளியில் பந்த் நடத்தப்படும்'' என்று வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ஆகஸ்ட் 13ம் தேதி கர்நாடகாவில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பந்த் நடத்த வேண்டாம் என்று முதல்வர் (டிகே சிவக்குமார்) கோரிக்கை வைக்கிறார். ஆனால் டிகே சிவக்குமார் எந்த பேச்சுவார்த்தைக்கும் வரவில்லை. இதனால் பந்த் முடிவில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை.
ஆகஸ்ட் 13 பந்த்-க்கு முன்பாக ஆகஸ்ட் 10ம் தேதி கர்நாடகா - தமிழ்நாட எல்லையான அத்திப்பள்ளியில் பந்த் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டம் ஆகஸ்ட் 13ம் தேதி போராட்டத்துக்கு முன்னோட்டமாக தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் நடைபெற உள்ளது'' என்றார்.
இதனால் ஆகஸ்ட் 10ம் தேதி வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் கர்நாடகா - தமிழ்நாடு எல்லையான அத்திப்பள்ளியில் போராட்டம் நடத்தி சாலையை மூடலாம் என்பதால் இருமாநிலங்கள் இடையே போக்குவரத்து பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்
