கேரள மாநிலத்தின் முதல்வராக வி.டி. சதிஷன் காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வ அறிவிப்பு kerala chief minister satheesan
கேரள மாநிலத்தின் முதல்வராக வி.டி. சதிஷன் காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வ அறிவிப்பு kerala chief minister satheesan

வி.டி. சதீசன் (Vadassery Damodaran Satheesan) கேரளாவின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், பினராயி விஜயன் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டவர் மற்றும் பரவூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆவார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியை இவர் வழிநடத்துகிறா
வடசேரி தாமோதரன் சதீசன் (V. D. Satheesan) இவர் கடந்த 15வது கேரள சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டார் , மேலும் கேரளப் பிரதேச காங்கிரசு கட்சியின் துணைத் தலைவராகவும் பணியாற்றுகிறார்.
சதீசன் 1986-1987 காலகட்டத்தில் மகாத்மா காந்தி பல்கலைக்கழக ஒன்றியத்தின் தலைவராக இருந்தார். தேசிய மாணவர் சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.[
1996ஆம் ஆண்டு கேரள சட்டப் பேரவைத் தேர்தலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் வேட்பாளர் பி.ராஜூவிடம் தோல்வியடைந்ததன் மூலம் அரசியலில் அறிமுகமானார்.
பின்னர் சதீசன் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியபோது 2001ஆம் ஆண்டு முதன்முதலில் கேரள சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மீண்டும் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற கேரள சட்டசபை தேர்தலில், கே. எம். தினகரனை எதிர்த்து பறவூர் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கேரள சட்டமன்றத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பன்னியன் இரவீந்திரனை 11349 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2016-ல், சதீசன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சாரதா மோகனை 20,634 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து பறவூர் தொகுதியிலிருந்து மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
12வது சட்டமன்றத்தில் இந்திய தேசிய காங்கிரசின் தலைமை கொறடாவாக பணியாற்றினார்.
2021-ல், இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் எம். டி. நிக்சனை 21,301 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, பறவூர் தொகுதியில் இருந்து ஐந்தாவது முறையாக மீண்டும் கேரள சட்டமன்றத்திற்குத் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
