அமெரிக்க விமானக் கண்காட்சியில் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான போர் விமானம் - உயிர்தப்பிய விமானிகள் வைரல் வீடியோ
அமெரிக்க விமானக் கண்காட்சியில் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான போர் விமானம் - உயிர்தப்பிய விமானிகள் வைரல் வீடியோ
அமெரிக்காவின் ஐடஹோவில் விமானக் கண்காட்சியின் போது நடுவானில் நடந்த இந்த விபத்தில் விமானங்களில் இருந்த 4 விமானிகளும் பாதுகாப்பாக பாராசூட் மூலம் நூலிழையில் உயிர்தப்பினர்.A fighter jet crashed in mid-air after a head-on collision during a US air show - video of the pilots surviving goes viral
அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தில் நடைபெற்ற விமானக் கண்காட்சியின்போது, இரண்டு அதிநவீனப் போர் விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க சுதந்திரத்தின் 250வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில் கடற்படை மற்றும் விமானப்படை கண்காட்சிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று மேற்கு இடாஹோவில் உள்ள மவுண்டன் ஹோம் விமானப்படைத் தளத்தில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விமான சாகச நிகழ்ச்சியின்போது இரண்டு கடற்படை விமானங்கள் ஒன்றையொன்று மோதிக்கொண்டன. பாராசூட்டுகள் மூலம் அதில் இருந்த விமானிகள் நால்வரும் உயிர் தப்பினர்.
இந்த விபத்தில், வாஷிங்டனின் விட்பே தீவில் உள்ள எலக்ட்ரானிக் அட்டாக் ஸ்குவாட்ரன் 129-ஐச் சேர்ந்த இரண்டு அமெரிக்க கடற்படை EA18-G கிரௌலர் விமானங்கள் சம்பந்தப்பட்டிருந்தன என்று அமெரிக்க பசிபிக் கடற்படையின் கடற்படை விமானப் படைகளின் செய்தித் தொடர்பாளரான கமாண்டர் அமெலியா உமாயம் கூறினார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“மவுண்டன் ஹோம் விமானப்படைத் தளத்திற்கு வடமேற்கே இரண்டு மைல் தொலைவில் விமான விபத்து ஒன்று நேரிட்டுள்ளது.“மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். விபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/2056330227157270633
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ
