Breaking News

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் முதலமைச்சர் விஜய்

அட்மின் மீடியா
0


தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற மிக முக்கியமான நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது



தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக கூட்டணி 73 இடங்களுடன் இரண்டாம் இடத்தையும், அதிமுக கூட்டணி 53 இடங்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட காங்கிரஸ் , விசிக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, சுமார் 120-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு முதலமைச்சர் விஜய்க்கு இருப்பதாகக் கூறப்பட்டது

விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை அறிவித்துள்ளன. சி.வி. சண்முகம் அணி முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியைத் தாம் ஆதரிப்பதாக அறிவித்துள்ளார். இவருடன் மொத்தம் 30 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். 

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விஜய் தலைமையிலான அரசுக்குத் தனது ஆதரவை வாழ்த்துச் செய்தியின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். 

அ.ம.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ காமராஜ், தனது ஆதரவை முதல்வர் விஜய்க்கு தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க அரசுக்கு எதிராக வாக்களிக்க போவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இவரது அணியில் 17 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். 

நம்பிக்கை வாக்கெடுப்பில் C.ஜோசப் விஜய்யின் அரசு 144 வாக்குகள் பெற்று வெற்றி.

*ஆதரவு*

தவெக-105

அமமுக-1

காங்கிரஸ்-5

இ.கம்யூனிஸ்ட்-2

மா.கம்யூனிஸ்ட்-2

விசிக-2

ஐயுஎம்எல்-2

அதிமுக அதிருப்தி அணி-25

*மொத்தம்=144*

*எதிர்ப்பு*

அதிமுக எடப்பாடி அணியினர்=22

*நடுநிலை*

பாமக=4

பாஜக=1

*வெளிநடப்பு*

திமுக=59

தேமுதிக=1

*நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணியினர் 22 பேர் எதிர்த்து வாக்களித்தனர்*

*அதிமுக எஸ்.பி.வேலுமணி அணியினர் 25 பேர் ஆதரவாக வாக்களித்தனர்*

*பாமகவைச் சேர்ந்த 4 பேரும், பாஜகவைச் சேர்ந்த ஒருவரும் நடுநிலை வகித்தனர்*

*திமுக உறுப்பினர்கள் 59 பேர் வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்*

*தேமுதிக உறுப்பினர் பிரேமலதாவும் வெளிநடப்பு செய்தார்*

*ஒரு தொகுதியில் விஜய் இராஜினாமா, தவெக உறுப்பினர் ஒருவர் வாக்களிக்க நீதிமன்றம் தடை, மற்றும் சபாநாயகர் ஒருவர் என மூன்று இடங்கள் தவிர்க்கப்பட்டன*.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback