Breaking News

இரண்டாக உடைந்தத அதிமுக! எடப்பாடி அணி , வேலுமணி அணி என 2 அணியாக சட்டமன்றம் வந்த எம் எல்.ஏக்கள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

இரண்டாக உடைந்தத அதிமுக! எடப்பாடி அணி , வேலுமணி அணி என 2 அணியாக சட்டமன்றம் வந்த எம் எல்.ஏக்கள் முழு விவரம்





சட்டப்பேரவைக்கு தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உடன் வருகை தந்த எடப்பாடி பழனிசாமி , எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தனியாக வருகை தந்தனர்

அ.தி.மு.கவில் பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்று வரும் நிலையில் எம்.எல்.ஏவாக பதவியேற்க குறைந்த ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சட்டப்பேரவைக்கு வந்த எடப்பாடி பழனிசாமி..!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ள இதே வேளையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் தலைமை மாற்றக் கோரி முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. 

நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களையும் மட்டுமே கைப்பற்றியது. பல தொகுதிகளில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதோடு, டெபாசிட் இழந்த அதிர்ச்சியும் அதிமுக தொண்டர்களை கடுமையாக பாதித்துள்ளது

தொடர் தேர்தல் தோல்விகளால் விரக்தியடைந்த முன்னாள் அமைச்சர்கள், எடப்பாடி பழனிசாமி தனது பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலக வேண்டும் எனப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

தன்னைப் பதவியிலிருந்து நீக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி, செல்லூர் ராஜு, தம்பிதுரை மற்றும் தனபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

மறுபுறம் எடப்பாடிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் ஓரணியில் திரண்டுள்ளனர்

அதிமுகவின் மொத்தம் உள்ள 82 மாவட்டச் செயலாளர்களில் வெறும் 17 பேர் மட்டுமே எடப்பாடி இல்லத்திற்கு வந்தனர். மேலும், வெற்றி பெற்ற 47 எம்.எல்.ஏ-க்களில் 15 பேர் மட்டுமே அவருடன் உள்ளனர். இது எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு சரிந்துள்ளதைக் காட்டுகிறது.

அதிமுகவின் பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்களும், எஞ்சிய 32 சட்டமன்ற உறுப்பினர்களும் வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்புக்கே தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

உங்களால் கட்சித் தொடர் தோல்விகளைச் சந்தித்து, இன்று எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்துவிட்டோம். எனவே, உடனடியாகப் பதவியை விட்டு விலகி, கட்சியை மீட்டெடுக்க வழிவிடுங்கள் என்பதே இவர்களின் ஒற்றை முழக்கமாக உள்ளது. 

இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் கே.பி.முனுசாமி உள்ளிட்ட சிலர் முதலில் வருகை தந்தனர். சிறிது நேரம் கழித்து சி.வி.சண்முகம் தலைமையில் 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தனியாக வந்து அமர்ந்தனர். 

வழக்கமாக எடப்பாடி வரும்போது அவருடன் அனைவரும் வரும் நிலையில், இந்த இரு குழு வருகை அதிமுகவில் முழுமையான பிளவு ஏற்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.


Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback