இஸ்லாமிய சிறுமிக்கு சட்டப்பூர்வ பாதுகாவலரான இந்து தம்பதி! நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...! நடந்தது என்ன முழு விவரம்
இஸ்லாமிய சிறுமிக்கு சட்டப்பூர்வ பாதுகாவலரான இந்து தம்பதி! நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...! நடந்தது என்ன முழு விவரம்
இஸ்லாமிய சிறுமிக்கு இந்து தம்பதி பாதுகாவலரா?... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!
முஸ்லீம் மதத்தை சேர்ந்த சிறுமிக்கு சட்டபூர்வ பாதுகாவலராக, இந்து தம்பதியினரை நியமிக்க மறுத்த மதுரை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, இந்து தம்பதியினரை சட்டப்பூர்வ பாதுகாவலர்களாக நியமித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவு வழங்கியுள்ளது
மதுரையைச் சேர்ந்த பாலாஜி என்பவர் தாங்கள் தத்தெடுத்து வளர்க்கும் இஸ்லாமிய சிறுமிக்கு சட்டபூர்வ பாதுகாவலராக, தங்களை நியமிக்க அனுமதிக்கோரிய மனுவை நிராகரித்த மதுரை குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து சிறுமிக்கு சட்டபூர்வ பாதுகாவலராக நியமிக்க அனுமதி கோரி வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, "மனுதாரருக்கு 2012-ஆம் ஆண்டு திருமணமாகி, குழந்தை இல்லாத நிலையில், தத்தெடுக்க முடிவு செய்துள்ளனர்.
அருகில் வசித்து வந்தவருக்கு 3 குழந்தைகள் இருந்த நிலையில், வறுமையால் அனைத்து குழந்தைகளையும் பராமரிக்க முடியாத நிலையில் இருந்ததால், மூன்றாவது பெண் குழந்தையை மனுதாரருக்கும் அவரது மனைவிக்கும் தத்து கொடுத்துள்ளனர்.குடும்பநல நீதிமன்றம் மறுப்புமனுதாரர் இந்து மதத்தைச் சேர்ந்தவர். குழந்தை இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர். பெண் குழந்தை என்பதாலும், தத்தெடுத்தவர்கள் இருவரும் அந்நியராக இருப்பதாலும் குடும்ப நல நீதிமன்றம் அனுமதியை வழங்க மறுத்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் கருத்துஇந்த வழக்கைப் பொருத்தவரை குழந்தையின் இயற்கையான தாய் குழந்தையை தத்து கொடுக்க முழுமையான சம்மதத்தை வழங்கியுள்ளார்.குழந்தையும் மனுதாரரை அப்பா, அவரது மனைவியை அம்மா என அழைக்கிறது.அரசியலமைப்புச் சட்டம் மதசார்பற்றது.எனவே எந்த மதத்தைச் சேர்ந்தவரும் சிறுமியின் பாதுகாவலராக நியமிக்கப்பட முடியும்.
குழந்தையின் நலன் மிக முக்கியமானது.இந்த வழக்கில் மேல்முறையீட்டாளரும், அவரது மனைவியும் குழந்தையை உண்மையாக வளர்த்து வருவதும், குழந்தையும் அவர்களை ஏற்றுக் கொண்டதும் உறுதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.எனவே மேல்முறையீட்டாளர் சட்டபூர்வ பாதுகாவலராக நியமிக்கப்படுகிறார். மதுரை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது" என உத்தரவிட்டனர்.
Tags: தமிழக செய்திகள்
