தமிழக வெற்றிக்கழக பெண்களை ஆபாசமாக பேசிய பொன்ராஜ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு! A case has been registered under 4 sections against Ponraj,
தமிழக வெற்றிக்கழக பெண்களை ஆபாசமாக பேசிய பொன்ராஜ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு! A case has been registered under 4 sections against Ponraj, who made obscene remarks about women in TVK
அரசியல் விமர்சகராகவும், ஊடக விவாதங்களில் திமுக ஆதரவு பேச்சாளராகவும் அறியப்படுபவர் பொன்ராஜ். இந்திய ஜனநாயக மீட்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தவெகவுக்கு ஆதரவளித்துப் பேசிய பெண் தொண்டர்கள் குறித்து யூடியூப் பக்கத்தில் தவெக பெண் ஆதரவாளர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறான கருத்துக்களைப் பதிவிட்டதாக பொன்ராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தவெக தொண்டர்கள் மட்டுமின்றி, பல்வேறு மகளிர் அமைப்புகள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு முன்பாக இவர், தவெகவின் பெண் தொண்டர்கள் பற்றி அவதூறாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுகுறித்து, தேர்தலுக்கு முன்னதாக, சென்னை டிஜிபி அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் நேரில் சென்று புகார் அளித்தார். பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
தவெகவினர் அளித்த அந்தப் புகாரின் உண்மை விபரங்களை முறைப்படி ஆராய்ந்த கடலூர் புதுநகர் காவல் நிலையப் போலீசார், அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது பெண்களை அவதூறாகப் பேசுதல் உள்ளிட்ட மொத்தம் 4 கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் முறைப்படி வழக்குப் பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதேபோல சென்னையிலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது
Tags: அரசியல் செய்திகள்

