ஒரே நாளில் 22 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு
ஒரே நாளில் 22 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணையையும் வெளியிட்டுள்ளது.15-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் சார்புச் செயலாளர் சங்கரன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையாளராக இருந்த ஜெ.குமரகுருபரன், வணிக வரித்துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் சந்தியா வேணுகோபால் சர்மா, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறையின் செயலாளராக இருந்த ஷில்பா பிரபாகர் சதீஷ் தொழிலாளர் நலத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுலா, கலாச்சாரத் துறைச் செயலாளராக ஸ்வர்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தொழில் மற்றும் முதலீட்டுத்துறை சிறப்புச் செயலாளராக சந்தீப் நந்தூரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய் நிர்வாக ஆணையராக பிரகாஷ், நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜவுளித்துறை ஆணையராக சோபனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நகர திட்ட ஆணையராக கிரண் குர்லா மற்றும் மீன்வளத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக விஜயகார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சமூக நலத்துறை இயக்குநராக மகேஷ்வரி ரவிக்குமார்,நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநராக செந்தில் ராஜ், நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு இயக்குநராக பாஸ்கர பாண்டியன், நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கருவூலத்துறை இயக்குநராக சாருஸ்ரீ,நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக ரவிகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை இயக்குநராக ஆஷா, நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை இயக்குநராக கிறிஸ்துராஜ்,நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டிட்கோ முதன்மைச் செயலாளராக கார்த்திகேயன், நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பசுமை எரிசக்திக்கழக நிர்வாக இயக்குநராக வினய், நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநராக அனீஷ் சேகர், நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஊரக வளர்ச்சி திட்ட தலைமைச் செயல் அதிகாரியாக சஜீவனா, நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிப்காட் நிர்வாக இயக்குநராக ராமன், நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாநகராட்சி ஆணையாளராக லலிதியா நீலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்
