Breaking News

நீட் மறுத்தேர்வு ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு NEET UG 2026 Re-Exam To Be Held On June 21

அட்மின் மீடியா
0

நீட் மறுத்தேர்வு ஜூன் 21 ஆம் தேதி  நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு NEET UG 2026 Re-Exam To Be Held On June 21


நீட் நுழைவுத்தேர்வை, தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. 

அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3-ந்தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

இந்த நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் பல்வேறு இடங்களில் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே கசிந்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

இதற்கான மறுதேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை என்றும், கூடுதல் கட்டணம் எதுவும் கட்ட தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

Give Us Your Feedback