டெல்லியில் தனியார் பேருந்தில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை 2 பேர் கைது 2 arrested for gang-raping woman in private bus in Delhi
டெல்லியில் தனியார் பேருந்தில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை 2 பேர் கைது 2 arrested for gang-raping woman in private bus in Delhi
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கைது செய்துள்ளனர்.
கடந்த 12-ம்தேதி இரவு பேருந்தில் வந்த பெண்ணை, பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
டெல்லியின் பிதாம்புரா பகுதியில் உள்ள குடிசைப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், மங்கோல்புரி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.
கடந்த திங்கட்கிழமை இரவு வழக்கம் போல தனது வேலை முடிந்ததும் அவர் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.ராணி பாக் பகுதியில் சாலையோரம் ஒரு ஸ்லீப்பர் கோச் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக, அந்தப் பெண்ணை அவர்கள் வலுக்கட்டாயமாகப் பேருந்திற்குள் இழுத்துச் சென்றுள்ளனர்.
அங்கிருந்து நங்லோய் பகுதியை நோக்கி பேருந்தை ஓட்டிச் சென்றவாறே, ஓட்டுநரும் நடத்துநரும் அந்தப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லி போலீஸார் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.மேலும் பேருந்தையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள், "பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் பேருந்தின் பணியாளர்களே இந்தக் குற்றத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.
Tags: இந்திய செய்திகள்
