Breaking News

நீங்களும் வழக்கறிஞர் ஆகலாம் - 12 ம் வகுப்பு படித்தவர்கள் சட்டபடிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம் law colleges admission tamilnadu 2026

அட்மின் மீடியா
0

நீங்களும் வழக்கறிஞர் ஆகலாம் - 12 ம் வகுப்பு படித்தவர்கள் சட்டபடிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம் law colleges admission tamilnadu 2026




சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் பிஏ. எல்எல்பி, பிபிஏ. எல்எல்பி, பிகாம். எல்எல்பி, பிசிஏ. எல்எல்பி ஆகிய 5 ஆண்டு இளங்கலை ஆனர்ஸ் சட்டப் படிப்புகளும், அதேபோல், அரசு சட்டக் கல்லூரிகளில் பிஏ. எல்எல்பி 5 ஆண்டு சட்டப் படிப்பும் வழங்கப்படுகின்றன. 


விண்ணப்பிக்கும் முறை :-

தமிழ்நாடு  டாக்டர்   அம்பேத்கர்   சட்டப்பல்கலைகழகத்தின்  கீழ்  செயல்படும்  13 சட்டக்கல்லூரிகளில்  சேருவதற்கு  நுழைவு தேர்வு ஏதும் கிடையாது.  12ம்  வகுப்பில் எடுக்கும்   மதிப்பெண்ணின்   அடிப்படையில்தான் தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கர் சட்டப்பல்கலைகழகத்தில்   மாணவர் சேர்க்கைக்கான   கலந்தாய்வு   (Counselling) நடத்தப்படுகிறது. 

டாக்டர்   அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகம்   விண்ணப்பத்தினை  பரிசீலனை செய்து  மாணவர்களின்  தரவரிசை  பட்டியலை  (Rank List)  பல்கலைகழகம்  தனது இணையதளமான www.tndalu.ac.in    என்ற இணையதளத்தில்  வெளியிடும். 

தரவரிசை   பட்டியலின்   (Rank List)   அடிப்படையில்   ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக       கலந்தாய்வு   (Counselling)   நடத்தப்படும். 

கல்விதகுதி:-

12 ம் வகுப்பு  தேர்ச்சி 

5 ஆண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க:-

https://www.tndalu.ac.in/

விண்ணப்பிக்க கடைசி தேதி:-

05.06.2026

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் கவுரி ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2026-27-ம் கல்வியாண்டுக்கான தமிழ்நாடு டாக்டர் அம்பேத் கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியிலும், பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற அனைத்து அரசு சட்டக்கல்லூரிகளிலும் மற்றும் தனியார் சட்டக்கல்லூரிகளிலும் (அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டும்) உள்ள 5 ஆண்டு ஒருங்கி ணைந்தசட்டப்படிப்புகளுக்கு வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூன்) 5-ந்தேதி வரை சட்டப் பல்க லைக்கழகத்தின் www.tndahu.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையத ளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் 3 ஆண்டு சட்டப்படிப்பு மற்றும் முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback