தமிழக தேர்தலில் வாக்களித்த 10 வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் கைது செய்த காவல்துறை நடந்தது என்ன Police arrest 10 foreign nationals who voted in Tamil Nadu elections
தமிழக தேர்தலில் வாக்களித்த 10 வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் கைது செய்த காவல்துறை நடந்தது என்ன Police arrest 10 foreign nationals who voted in Tamil Nadu elections
வெளிநாடு வாழ் குடியுரிமை பெற்று தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்தது தொடர்பாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 23.04.2026 அன்று தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. வெளிநாடு வாழ் உரிமை பெற்ற நபர்கள் இந்தியாவுக்கு வந்து தமிழ்நாட்டில் அவரவர் இடங்களில் தங்கி 23.04.2026 அன்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களித்து, மீண்டும் அவர்களுடைய நாட்டிற்கு செல்லும்போது
சென்னை பன்னாட்டு விமான நிலைய குடியேற்ற அதிகாரிகள் அவர்களை விசாரணை செய்தபோது, இவர்கள் வெளிநாடு வாழ் உரிமையை பெற்றிருந்து, இந்திய குடிமகனாக இல்லாத பட்சத்தில் சட்டவிரோதமாக வாக்கு செலுத்தியுள்ளதாக தெரியவந்து, சென்னை பன்னாட்டு குடியேற்ற அதிகாரிகள் அவர்களை பிடித்து சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் ஒப்படைத்து, நடவடிக்கை மேற்கொள்ள புகார்கள் அளித்தனர்
அதனடிப்படையில் சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு மற்றும் சென்னை பெருநகர காவல் நிலையங்களில் கடந்த 07.05.2026 முதல் இன்று (14.05.2026) வரையில் சட்டவிரோத செயலாக வாக்களித்த இவர்கள் மீது 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,
இலங்கை நாட்டைச் சேர்ந்த
1.ரஞ்சினி, பெ/.59,
2.சர்புதீன், ஆ/வ.68,
3.நிலந்தி, பெ/வ.44,
4.ஜெயந்தன், ஆ/வ.40,
5.சார்லி பாலச்சந்திரன், ஆ/வ.48,
6.சக்ரவர்த்தி லோகப்பிரியா, ஆ/வ.50,
7.சுனிதா சக்ரவர்த்தி, பெ/வ.48,
இங்கிலாந்தைச் சேர்ந்த
8.அய்யாதுரை, ஆ/வ.53,
இந்தோனேஷியாவைச் சேர்ந்த
9.டிட்டின் மரியாட்டி, பெ/வ.47,
கனடா நாட்டைச் சேர்ந்த
10.ஜித்தேந்திரநாத், ஆ/வ.38
என 10 நபர்கள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Tags: தமிழக செய்திகள்
