இனி இந்த ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது... மெட்டா நிறுவனம் அதிரடி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
இனி இந்த ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது... மெட்டா நிறுவனம் அதிரடி அறிவிப்பு
செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் ஆண்ட்ராய்டு 6.0 க்கும் குறைவான இயங்குதளங்களில் செயல்படும் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் சேவை முழுமையாக நிறுத்தப்பட உள்ளது.
ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 போன்ற பழைய பதிப்புகளில் புதிய பாதுகாப்பு வசதிகளையும் நவீன அம்சங்களையும் வழங்குவது கடினம் என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பழைய ஹார்டுவேர் வசதிகள் புதிய அப்டேட்களை ஏற்க்கும் வசதி இல்லாததே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பயனர்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு விட்டதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்
