PF பணத்தை எடுக்க எங்கும் அலையாமல் உங்கள் மொபைல் போனில் யுபிஐ மூலம் எடுக்கலாம் முழு விவரம் இதோ PF Withdrawal UPI
PF பணத்தை எடுக்க எங்கும் அலையாமல் உங்கள் மொபைல் போனில் யுபிஐ மூலம் எடுக்கலாம் முழு விவரம் இதோ PF Withdrawal UPI
Employees can able to withdraw upto 75% of their PF through ATMs and UPI by March 2026.
EPFO உறுப்பினர்கள், தங்களின் EPF பணத்தை நேரடியாக UPI மூலம் வங்கிக் கணக்கில் பெறும் வசதி ஏப்ரல் மாதத்திற்குள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது EPF தொகையில் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் தக்கவைக்கப்படும் நிலையில், எஞ்சியுள்ள பெரும்பகுதி தொகையை UPI வழியாக தங்களின் வங்கிக் கணக்கில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் அமைச்சகம் இத்திட்டத்தில் செயல்படுகிறது. EPF-ன் ஒரு பகுதி முடக்கப்பட்டு, மீதமுள்ள பெரிய தொகையை உடனடியாக எடுக்கலாம். ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு UPI மூலம் பணம் மாற்றலாம்.
UPI அடிப்படையிலான வித்டிராயல் மூலம், க்ளைம்களின் எண்ணிக்கை குறையும், பணம் உடனடியாக கணக்கிற்கு வரும், அவசர தேவைகளுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்
UPI மூலம் எவ்வளவு PF பணம் எடுக்க முடியும்?புதிய திட்டத்தின்படி, EPF கணக்குதாரர்கள் 100% தகுதியான தொகையை எடுக்கலாம். ஆனால், கணக்கில் குறைந்தபட்சம் 25% தொகையை வைத்திருக்க வேண்டும். மீதமுள்ள தொகைக்கு 8.25% வருடாந்திர வட்டி கிடைக்கும்.
தற்போது EPFO மென்பொருள் ஒருங்கிணைப்பு, தொழில்நுட்ப சோதனை போன்றவற்றில் ஈடுபட்டுள்ளது. ஏப்ரல் 2026-க்குள் இந்த வசதி நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் க்ளைம் செய்யும் சிக்கல் தீரும்.
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி
