News Headlines இன்றைய முக்கிய செய்திகள்
News Headlines
சென்னை உலா - இன்று தொடக்கம் சென்னையின் பழமை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை கண்டுகளிக்ககும் வகையில், ‘சென்னை உலா' சிறப்பு சுற்று வட்ட பேருந்து சேவை இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது! இதற்கான பயண கட்டணம் ரூ.50ஆக நிர்ணயம். இதற்காக இயக்கப்படும் 5 பேருந்துகளிலும் நாள் முழுவதும் பயணிக்கலாம். சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் சென்னை பல்லவன் இல்லம் வரை 16 வழித்தடங்களில் பயணிக்கலாம்.
பொங்கலை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 1,000 காளைகள், 550 மாடுபிடி வீரர்கள் களம் காண உள்ளனர்.
அனைவருக்கும் கல்வி திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.3500 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க கோரிய வழக்கில் 4 வாரத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் இறுதி வாய்ப்பு வழங்கி உத்தரவு!
சட்டவிரோதமாக இயங்கி வந்த 242 ஆன்லைன் கேமிங் மற்றும் சூதாட்ட இணையதளங்களை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை!ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் நிதி மற்றும் சமூகத் தீங்கைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய ஆன்லைன் கேமிங் சட்டத்தின்கீழ், இதுவரை 7,800 தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிப்பு.
பிப்.1 ஞாயிறு அன்று இந்திய பங்குச்சந்தைகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு. மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் காலை 9 மணி முதல் 3:30 மணி வரை இயங்கும் என தெரிவிப்பு.
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உள்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட ஒரே மாதத்தில் 47 லட்சம் கணக்குகள் நீக்கம்...சமூக ஊடகங்களுக்கான தடை பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தகவல்...
அமேசான், பிளிப்கார்ட், மீஷோ, மெட்டா நிறுவனங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் அபாரதம் விதித்த மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்...தொலைத்தொடர்பு சட்டங்களை மீறி, அங்கீகரிக்கப்படாத வாக்கி-டாக்கிகளை விற்றதாகக் கூறி நடவடிக்கை..
மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி.உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா 65 இடங்களுடன் இரண்டாமிடம்; ஷிண்டே ( தரப்பு சிவசேனா 29 இடங்களையும், காங்கிரஸ் 24 இடங்களையும் கைப்பற்றின
அமைச்சர் துரைமுருகனுக்கு பேரறிஞர் அண்ணா செயலர் வெ.இறையன்புக்கு தமிழ் தென்றல் திரு.வி.க. விருதும், வழக்கறிஞர் அருள்மொழிக்கு தந்தை பெரியார் விருதும் வழங்கி கௌரவிப்பு
அஞ்சாமை, மனிதநேயம், அறிவாற்றல், ஊக்கமளித்தல் என்பதே திமுக ஆட்சியின் அடிநாதம்; திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழக மக்களுக்கு 4 வாக்குறுதிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை அமெரிக்காவே நிறுத்தியதாக ட்ரம்ப் மீண்டும் பேச்சு; போரை நிறுத்தி 1 கோடி மக்களை காப்பாற்றியதாக பாகிஸ்தான் பிரதமர் நன்றி தெரிவித்ததாகவும் பெருமிதம்
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் தமிழக செய்திகள்
