Breaking News

News Headlines Today இன்றைய முக்கிய செய்திகள்

அட்மின் மீடியா
0

 News Headlines Today



ஜனநாயகன் சென்சார் வழக்கில் நிறைவடைந்த வாதங்கள்.. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நீதிபதிகள்

ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழுவில் இடம்பெற்றிருக்கும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல்! ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், இந்த நிகழ்வு அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது!

மதுரை எல்ஐசி கிளை தீ விபத்தில் பெண் மேலாளர் உயிரிழந்த வழக்கில் அதிர்ச்சி திருப்பமாக பெண் அதிகாரியை எரித்துகொன்றதாக உதவி நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத் தகடுகள் மாயமான விவகாரம் - சென்னையில் நடந்த அமலாக்கத் துறை சோதனைகள் நிறைவுஇந்த வழக்கில் ஏற்கனவே கைதான அம்பத்தூரில் உள்ள பங்கஜ் பண்டாரியின் நகை செய்யும் நிறுவனம், வேப்பேரியில் உள்ள அவரது மகன் வீடு, கொண்டித்தோப்பில் உள்ள நகைக்கடை பணியாளர் கல்பேஷ் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.பல்வேறு முக்கிய டிஜிட்டல் ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக அமலாக்கத்துறை தகவல்

சட்டப்பேரவையின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்க வலியுறுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு. உரையை முற்றிலும் வாசிக்காமல் 3வது ஆண்டாக வெளியேறினார்

ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்ற பெயரில் திருச்சியில் வரும்| மார்ச் 8ம் தேதி மாநில மாநாடு நடைபெறும். திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

ஆளுநர் உரை நடைமுறையை மாற்றும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த முயற்சிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 கூடியது. சென்னையில் சவரன், 1,11,200 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது

அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கையால் ஆட்டம் காணும் பங்குச் சந்தைகள். ஒரே நாளில் 10 லட்சம் கோடி ரூபாயை இழந்த முதலீட்டாளர்கள்

ரஷ்யாவில் 146 ஆண்டுகளில் இல்லாத அளவில் கொட்டிய பனியால் அச்சம். ஒரே நாளில் 40 அடிக்கு கொட்டியதால் முடங்கிய நகரங்கள்.

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மயிலாடுதுறையைச் சேர்ந்த 7 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை மீனவர்களின் 2 நாட்டுப் படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை நடவடிக்கை; கைதான மீனவர்கள் 7 பேரும் இலங்கை காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை

ஆளுநர் வெளிநடப்பு செய்தநிலையில் அவரது உரையை வாசித்த சபாநாயகர் அப்பாவு; ஆளுநர் என்பவர் அரசியல்வாதியாக இருக்கக்கூடாது என சபாநாயகர் அப்பாவு கருத்து

ஆளுநர் உரை தொடர்பாக கேரள சட்டமன்றத்திலும் சர்ச்சை; மத்திய அரசை விமர்சிக்கும் வரிகளை ஆளுநர் படிக்கவில்லை என்று முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

பாஜக உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க சென்னை வந்தார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்; அதிமுகவுடன் தொகுதி பங்கீடு, தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தவும் திட்டம்

பிரதமர் மோடி வர உள்ளதை அடுத்து வருகிற 23ம் தேதி சென்னை விமான நிலைய வட்டாரத்தில் டிரோன்கள் பறக்கத்தடை - சென்னை மாநகரிலும் தடை அமலில் உள்ளதாக காவல்துறை அறிவிப்பு

சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் மைக் ஆஃப் செய்யப்பட்டதால் பரபரப்பு - பேச அனுமதிக்கப்படவில்லை என்றும், தன்னை அவமதித்துவிட்டதாகவும் கூறி ஆளுநர் வெளிநடப்பு

சட்டப்பேரவையில் தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையில் ஆதாரமற்ற தகவல்கள், மக்களை தவறாக வழிநடத்தும் அம்சங்கள் இருந்ததால் ஆளுநர் புறக்கணித்துவிட்டதாக மக்கள் பவன் விளக்கம்

பாஜகவின் பிரதிநிதியாக ஆளுநர் சட்டமன்றத்திற்கு வந்து சென்றுள்ளதாக அமைச்சர் ரகுபதி விமர்சனம் ஆளுநரின் மைக் ஆஃப் செய்யப்பட்டதாக சொல்வது முற்றிலும் தவறானது என்றும் விளக்கம்

அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக வழங்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய மறுப்பது குற்றத்திற்கு உதவுவதற்கு சமம் என டிஜிபிக்கு எழுதிய கடிதத்தில் ED எச்சரிக்கை

2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங். தொடருமா? என்ற கேள்வி - டெல்லி தலைமை முடிவெடுக்கும் என மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் மழுப்பலான பதில்

நாக்பூரில் இந்தியா - நியூசிலாந்து இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் பலப்பரீட்சை

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback