News Headline Today இன்றைய தலைப்பு செய்திகள்
News Headline Today இன்றைய தலைப்பு செய்திகள்
இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.22.20 கோடி அபராதம் விதிப்பு! 2025 டிசம்பரில் ஏற்பட்ட செயல்பாட்டுக் குறைபாடுகளால் பயணிகள் எதிர்கொண்ட கடும் சிரமங்கள் காரணமாக, ரூ. 22.20 கோடி அபராதம் விதிப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவிப்பு.
ஓசூர் விமான நிலையத் திட்டத்தை மீண்டும் நிராகரித்தது ஒன்றிய அரசு! அப்பகுதியில் உள்ள வான்வெளி ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்குத் தேவைப்படுவதாகக் கூறி, தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்தாக தகவல்.
கிரீன்லாந்தை கைப்பற்ற எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், டென்மார்க், ஜெர்மனி, ஸ்வீடன், பின்லாந்து, நெதர்லாந்து, நார்வே ஆகிய 8 ஐரோப்பிய நாடுகள் மீது 10% வரி விதித்து அதிரடி. பிப்.1 முதல் நடைமுறைக்கு வரும் இந்த வரி விதிப்பு, ஜூன் 1 முதல் 25%ஆக உயரும் எனவும் எச்சரிக்கை.
இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3வது மற்றும் தொடரின் கடைசி ஒருநாள் போட்டி இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் நியூசிலாந்தும் வென்றுள்ள நிலையில், தொடரை வெல்ல இரு அணிகளும் பலப்பரீட்சை!
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு இன்று கடைசி நாள்!
SIR பணிகளின்போது 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், இதுவரை 12.80 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். உயிரிழந்த வாக்காளர்கள் போக 53.65 லட்சம் பேர் இன்னும் விண்ணப்பிக்கவில்லை.அடுத்த மாதம் 17 ஆம் தேதி வெளியிடப்படுகிறது தமிழக இறுதி வாக்காளர் பட்டியல்...
ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத் துறையில் அரசு வேலை வழங்கப்படும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 19 காளைகளைத் தழுவிய வீரர் வெற்றி. முதலிடம் பிடித்த கருப்பாயூரணி கார்த்திக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்களுக்கும் இலவச பேருந்துப் பயணம். பெண்களுக்கு மாதம் ரூ.2,000 உரிமை தொகை வழங்கப்படும் எனவும் இபிஎஸ் அறிவிப்பு.
இந்தோனேசியா: யோகியகர்தாவில் இருந்து 11 பேருடன் புறப்பட்ட பயணிகள் விமானம் திடீரென மாயமானதால் பரபரப்பு!ஜாவா - சுலாவெசி தீவுகள் இடையே விமானம் சென்று கொண்டிருந்தபோது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாகத் தகவல். மாயமான விமானத்தை டிரோன், ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி நடந்து வருகிறது.
EPFO உறுப்பினர்கள், தங்களின் EPF பணத்தை நேரடியாக UPI மூலம் வங்கிக் கணக்கில் பெறும் வசதி ஏப்ரல் மாதத்திற்குள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது EPF தொகையில் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் தக்கவைக்கப்படும் நிலையில், எஞ்சியுள்ள பெரும்பகுதி தொகையை UPI வழியாக தங்களின் வங்கிக் கணக்கில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை குரோம்பேட்டை, பல்லாவரம் காவல் நிலையங்களில் பொங்கலின்போது நடனமாடிய காவலர்கள் 23 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையர் உத்தரவு காவல் நிலைய காவலர்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நடவடிக்கை நடனமாடியவர்கள், கைதட்டி ரசித்த காவலர்கள் என 23 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றினார் காவல் ஆணையர்
குழந்தைகளுக்கு இருமலுக்காக பயன்படுத்தப்படும் Almont Kid சிரப் மருந்தை பயன்படுத்த, விற்பனை செய்ய, விநியோகிக்க தடை விதித்து அரசு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் அறிவிப்பு.எத்திலீன் கிளைகால் என்ற உயிருக்கு ஆபத்தான வேதிப்பொருள் கலந்திருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல். மருந்து தொடர்பான சந்தேகங்கள், புகார் இருந்தால் 94458 65400 எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிப்பு.
மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றத்திற்கான நேரம் வந்து விட்டதாக பிரதமர் மோடி பிரசாரம் - திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு பாஜக ஆட்சி அமைந்தால் மட்டுமே வளர்ச்சி சாத்தியமாகும் என்றும் திட்டவட்டம்...
செயற்கை நுண்ணறிவு செயலியான ChatGPT-ஐ பயனர்கள் இனி இலவசமாக பயன்படுத்த முடியாது என OpenAI நிறுவனம் அறிவிப்பு. ChatGPT-ல் இனி மாதந்தோறும் சந்தா கட்ட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் விளம்பரங்கள் காட்சியாகும் எனவும் தகவல்
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் தமிழக செய்திகள்
