Breaking News

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் குறைப்பு தமிழக அரசு அரசாணை வெளியீடு

அட்மின் மீடியா
0
TET தேர்வு - மதிப்பெண் குறைப்பு தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்களை 5% குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு 




பொதுப்பிரிவினர் தேர்ச்சி மதிப்பெண்களில் மாற்றம் இல்லை - 60 சதவிகிதம் மதிப்பெண் பெற வேண்டும், மற்ற பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்கள், 55 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாக குறைப்பு,

ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் SC/ST/BC/MBC பிரிவ்னருக்கான தகுதி மதிப்பெண்களை அதிரடியாகக் குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறுகையில், 

தமிழ்நாடு முதலமைச்சர்ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி ஆசிரியர்களின் நலன்காக்கும் அரசாகச் செயல்படும் திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த அரசாணையாக, பல லட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் கனவுகளோடு காத்திருக்கும் தேர்வர்களுக்கும் பலனளிக்கும் வகையில் இனிவரும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி மதிப்பெண்களை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு55 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும்பிற்படுத்தப்பட்டோர் – மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து, 50 சதவீதமாகவும் மாற்றி அரசாணை வெளியிடப்படுகிறது.

இதன் மூலம் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நம் முதலமைச்சர் என்றுமே உறுதுணையாக இருப்பார் என்பதையும், இது சமூகநீதி காக்கும் அரசு என்பதையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியிருக்கின்றோம்.ஆசிரியர்கள் மகிழ்ச்சியே திராவிட மாடல் அரசின் மகிழ்ச்சி! என தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் குறைப்பு:

GEN 60% 
BC, MBC 50% 
SC, ST 40%

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback