Breaking News

ஜார்கண்டில் மூடப்படாத ரயில்வே கேட்டில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி நடந்த விபத்து அதிர்ச்சி வீடியோ

அட்மின் மீடியா
0

ஜார்கண்டில் மூடப்படாத ரயில்வே கேட்டில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி நடந்த விபத்து அதிர்ச்சி வீடியோ



ஜார்கண்ட் மாநிலம் ரோஹினி என்ற பகுதியில் ஜஷிடிஹ் - ஹவுரா வழித்தடத்தில் மூடப்படாத ரயில்வே கேட்டை கடந்த லாரி மீது ரயில் மோதி விபத்து உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என தகவல்

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் உள்ள ரோஹினி பகுதியில் இன்று காலை பெரும் ரயில் விபத்து ஒன்று நிகழ்ந்தது. ஜஷிடிஹ் - ஹவுரா ரயில் வழித்தடத்தில் உள்ள ஒரு லெவல் கிராசிங்கில், கோண்டா - அசன்சோல் எக்ஸ்பிரஸ் (Gonda-Asansol Express) ரயில் வந்து கொண்டிருந்தபோது, தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி மீது பலமாக மோதியது.

இந்த விபத்தின்போது தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கி நசுங்கின. விபத்தை உணர்ந்த ரயில் ஓட்டுநர் துரிதமாகச் செயல்பட்டு ரயிலை நிறுத்தியதால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் அசன்சோல் பிரிவின் மூத்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதையை சீரமைத்தனர்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/2014321929705156782

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback