காஷ்மீரில் திடீரென ஏற்ப்பட்ட பனிச்சரிவு... நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!
காஷ்மீரில் திடீரென ஏற்ப்பட்ட் பனிச்சரிவு... நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த சிசிடிவி காட்சிகளில், மலையிலிருந்து ராட்சத வேகத்தில் சரிந்து வரும் பனிப்படலங்கள், அங்கிருந்த தற்காலிகக் குடியிருப்புகள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த இயந்திரங்களை ஒரு நொடியில் மூழ்கடிப்பது தெளிவாகத் தெரிகிறது.
பனிச்சரிவு எச்சரிக்கை ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்ததால், அந்தப் பகுதியில் இருந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு முன்கூட்டியே மாற்றப்பட்டனர். இதனால் ஒரு பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் பேரிடர் மேலாண்மை ஆணையம் குல்மார்க், பந்திபோரா மற்றும் குப்வாரா மாவட்டங்களுக்கு 'மஞ்சள் எச்சரிக்கை' விடுத்துள்ளது.
அடுக்கு பனியின் உறுதித்தன்மை குறைவாக இருப்பதால், சிறிய அதிர்வுகள் கூட பெரிய பனிச்சரிவை ஏற்படுத்தக்கூடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் செங்குத்தான மலைப்பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/ippatel/status/2016215888513687758

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

