Breaking News

விஜயின் தமிழக வெற்றிக்கழகத்திற்கு 'விசில்' சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
விஜய்யின் தவெக-வுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இதனால், இந்த முறை நான்கு முனைப் போட்டி ஏற்படுவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வத் தேர்தல் சின்னமாக விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 

த.வெ.க. ஒரு பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால், 234 தொகுதிகளிலும் போட்டியிட ஏதுவாக 'பொதுச் சின்னம்' கேட்டு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது.

கட்சித் தலைமை சார்பில் தேர்தல் ஆணையத்திடம் சுமார் 10 விருப்பச் சின்னங்கள் வழங்கப்பட்டிருந்தது. அதில் தவெக தரப்பில் விசில் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இதில் விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.விஜய்யின் ரசிகர்களுக்காகவும், மக்கள் மத்தியில் எளிதில் சென்றடையும் என்பதாலும், 'விசில்' சின்னம் தவெகவின் முதன்மைத் தேர்வாக அமைந்ததாக கூறப்படுகிறது.

தவெக அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதால், அக்கட்சி போட்டியிடாத தொகுதிகளில் போட்டியிடும் | சுயேச்சை உள்ளிட்ட பிற வேட்பாளர்களுக்கு விசில் சின்னமானது ஒதுக்கப்படலாம் என தேர்தல் ஆணையம் அக்கட்சிக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளது

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback