Breaking News

முன்னாள் அதிமுக அமைச்சரும், ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தார் முழு விவரம்

அட்மின் மீடியா
0

முன்னாள் அதிமுக அமைச்சரும், ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தார் முழு விவரம்

முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து திமுகவில் இணைந்துள்ளார். இவர் ஓபிஎஸ் அணியின் முக்கிய ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது



தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகப் பதவி வகித்து வரும் வைத்திலிங்கம் அதிமுகவின் முக்கிய பிரபல பிரமுகராகவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராக வலம் வந்தவர்.

அம்மா இறப்புக்கு பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் தனிக் கட்சி நடத்தி வருகிறார். 

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டம், சென்னை வேப்பேரியில் கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி (24.11.2025) நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவானது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக மாறி இருப்பதாக ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் இணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் பேசுகையில், “மூன்றரை வருடம் இந்த (அதிமுக) கட்சி ஒன்றிணைய வேண்டும் என்று அமைதியாக அமைதி புரட்சி நடத்திக் கொண்டிருந்தார் ஓபிஎஸ்.

இன்னும் ஒரு மாதத்தில் கட்சி ஒன்றிணையவில்லை என்றால் ஒரு வியூகத்தை அமைத்து, ஓ.பி.எஸ். தலைமையிலான உரிமை மீட்பு குழு, கட்சியாக மாறி மாபெரும் வெற்றியை பெறும். நமக்கு அதிமுக தொண்டர்கள் நமது உடன்பிறப்புகள். அதற்கு இடையூராக எந்த சக்தி இருக்கிறதோ அந்த தீய சக்தியை விரட்டி அடிப்பதுதான் நமது ஒரே நோக்கமாக இருக்கும் என்பதைக் கூறி ஒற்றுமையாக இருங்கள். இன்னும் ஒரு மாதத்தில் நாம் வெற்றியை நோக்கி செல்வோம் எனப் பேசியிருந்தார்.

இந்நிலையில் வைத்திலிங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து திமுகவில் இணைந்துள்ளார்

அண்மையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்த மருது அழகுராஜ் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback