மதுரை எல்ஐசி அலுவலகத் தீ விபத்தில் பெண் மேலாளர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் - பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தீ விபத்து என நாடகம் -விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்
மதுரை எல்ஐசி அலுவலகத் தீ விபத்தில் பெண் மேலாளர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் - பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தீ விபத்து என நாடகம் -விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்
மதுரை எல்ஐசி கிளை தீ விபத்தில் பெண் மேலாளர் உயிரிழந்த வழக்கில் அதிர்ச்சி திருப்பமாக பெண் அதிகாரியை எரித்துகொன்றதாக உதவி நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மேலமாரட் பகுதியிலுள்ள LIC அலுவலகத்தில் டிச.18 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பெண் மேலாளர் கல்யாணி நம்பி (55) என்பவர் உயிரிழந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு ஒருவர் கைது
தீ விபத்தில் காயமடைந்த அலுவலக உதவி மேலாளர் ஆண்டாள்புரம் ராமகிருஷ்ணன் என்பவர் கல்யாணி நம்பியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ததாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
கல்யாணி நம்பியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் அளித்த புகார் அடிப்படையில் நடத்திய விசாரணையில், விபத்து தொடர்பான இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்திய கல்யாணி நம்பியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்தது தெரியவந்துள்ளது
விசாரணையின்போது ராம் தொடர்பான ஆவணங்களில் முறைகேடு இருப்பதை கண்டறிந்த கல்யாணிநம்பி, அவரிடம் பல நாட்களாக விசாரித்து வந்துள்ளார்.இதனால் அச்சமடைந்த ராம், ஆவணங்களை தீயிலிட்டு எரித்துள்ளார்.இதுகுறித்து காவல்துறைக்கு கல்யாணிநம்பி தகவலளிக்க முயன்றதால் ஆத்திரமடைந்த ராம், கல்யாணிநம்பியை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்துள்ளார்.இதையடுத்து ராமை கைது செய்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்
